fbpx

ஆர் எஸ் எஸ் அணிவகுப்பு…..! தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு……!

ஆர் எஸ் எஸ் அமைப்பு இந்துத்துவ கொள்கையை நாடு முழுவதும் பரப்பும் ஒரு அமைப்பாக இருந்து வருகிறது. இருந்தாலும், அந்த அமைப்புக்கு நாட்டுப்பற்று அதிகம் எந்தவித சந்தேகமும் இல்லை.

ஆனால் இந்துத்துவ கொள்கையை பரப்புகிறது என்ற ஒரே காரணத்திற்காக, அந்த அமைப்பை மதவாத இயக்கம் என்று முத்திரை குத்தி ஒதுக்கி வைத்திருக்கிறார்கள் சில அரசியல்வாதிகள்.

அந்த விதத்தில், சென்ற வருடம் அக்டோபர் மாதம் 2ம் தேதி தமிழகத்தில் இருக்கின்ற 50 பகுதிகளில் ஆர் எஸ் எஸ் ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. தமிழகத்தில் கோவை, பல்லடம், நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளில் அணிவகுப்பு நடத்துவதற்கு மறுப்பு தெரிவித்து, மற்ற 44 இடங்களில் சுற்றுச்சூழல் அனைவருக்கும் நடத்திக் கொள்ளலாம் என்று ஆர் எஸ் எஸ் அமைப்புக்கு அனுமதி வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஆனாலும் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஒரு காரணமாக, முன்வைத்து மாநில அரசும், காவல்துறையினரும் இந்த அணிவகுப்புக்கு அனுமதி தர மறுத்தனர்.இதுகுறித்து ஆர் எஸ் எஸ் நிர்வாகிகள் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சுற்றுச்சுவருடன் கூடிய மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி வழங்குமாறு உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த உத்தரவை எதிற்கும் விதமாக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் சார்பாக 45 மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷபிக் உள்ளிட்டவர் அடங்கிய அமர்வு சுற்றுச்சுவருடன் கூடிய, மைதானங்களில் அணிவகுப்பு நடத்த அனுமதி அளித்த தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தனர்.

அத்துடன் இந்த அமைப்பிற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று தெரிவித்து மீண்டும் விண்ணப்பம் செய்ய ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த விண்ணப்பங்கள் மீது ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு அனுமதி வழங்குமாறு காவல்துறையினருக்கும் உத்தரவு பிறப்பித்து இருக்கிறது

Next Post

குடும்பத்துடன் வெளிநாட்டில் குதூகலம்…..! குஷ்பூ சுந்தர் வெளியிட்ட புகைப்படம் ஆனா ஒருத்தரை மட்டும் காணோமே…..?

Fri Feb 10 , 2023
நடிகை குஷ்பூ 90களில் டாப் 10 ஹீரோயின்களில் ஒருவராக வலம் வந்தவர் அந்த காலகட்டத்தில் இவர் இணைந்து நடிக்காத கதாநாயகர்களே இல்லை என்று சொல்லலாம், அந்த அளவிற்கு சினிமா துறையில் பிரபலமாக வலம் வந்தவர். தற்சமயம் இவர் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அதோடு அவர் சின்னத்திரை நெடுந்தொடர்களிலும் நடித்து வருகின்றார், நடிப்பு ஒருபுறம் இருந்தாலும், அரசியலில் இன்னொருபுறம் அவர் எப்போதும் பிஸியாகவே இருந்து வருகிறார். குஷ்பூ சமூக […]

You May Like