தமிழ்நாட்டில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு போன்ற மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்த 3 பெண்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே A.K.R.குப்பத்தைச் சேர்ந்த 6 பேர் சென்ற ஞாயிற்றுக்கிழமை அதாவது நேற்றைய தினம் உயிரிழந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இருவர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு தம்பதிகள் உயிரிழந்தனர். தற்சமயம் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்கள் நலமுடன் இருப்பதாகவும் காவல்துறையினரின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அதோடு, பாதிக்கப்பட்ட 10 பேரும் எத்தனால் மற்றும் எத்தனால் கலந்த கள்ளச்சாராயத்தை குடித்திருக்கலாம் எனவும், இதுகுறித்து அமரன் என்பவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும் காவல்துறையினரின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனை விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது இத்தகைய நிலையில், தான் தமிழகம் முழுவதும் தேடுதல் வேட்டையில் ஈடுபடுங்கள் என்று காவல்துறையினருக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு பிறப்பித்திருக்கிறார். அதோடு கலாச்சாராயம் விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் எனவும், அவர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
வனப்பகுதியில் கண்காணிப்பை தீவிர படுத்தவும், மரக்காணம் பகுதியில் கள்ளச்சாராயத்தைக் குடித்து உயிரிழந்த சம்பவத்தில் சாராயத்தில் கலக்கப்பட்ட கெமிக்கல் தொடர்பாகவும் ஆய்வு செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.