fbpx

தமிழகத்தில் இனி மணல் திருட்டு நடக்கவே கூடாது: அரசு பதில் மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு..!

கரூர் மாவட்டம், சாணிபிரட்டி கிராமத்தை சேர்ந்த குணசேகரன் உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், தமிழ்நாடு, கேரளா எல்லைப் பகுதியில் அமராவதி ஆறு உருவாகிறது. அமராவதி ஆறு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டத்திற்கு குடிநீர் மற்றும் விவசாய தேவைகளுக்கு பயன்படுகிறது. அமராவதி ஆற்றின் கரையில் 10 முதல் 15 அடி ஆழம் வரை தோண்டி மணல் திருடப்படுகிறது.

இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில், ஆற்றுக்கு செல்வதற்கு பாதைகள் அமைத்து ஆற்று மணலை திருடுகின்றனர். சட்டவிரோதமாக ஆற்று மணலை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் எடுப்பதை தடுத்து, மணல் எடுப்பதற்காக ஆற்றில் போடப்பட்ட பாதையை அகற்ற உத்தரவிட வேண்டும். என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயண பிரசாத் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அதன்படி நீதிமன்றம் உத்தரவிட்டும் சட்டவிரோத மணல் திருட்டு நடைபெறுவது எப்படி. தமிழகம் முழுவதும் சட்டவிரோத மணல் திருட்டு என்பதே இருக்கக் கூடாது. தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

Baskar

Next Post

மனைவியின் கிட்னியை விற்று வேறு பெண்ணுடன் வாழ்க்கை…. கிட்னியில் கல் இருப்பதாக நம்ப வைத்து… கணவர் செய்த செயலால் அதிர்ச்சி ….

Thu Sep 15 , 2022
ஒடிசாவில் வேறொரு பெண்ணுடன் வாழ பணம் இல்லாததால் மனைவியை ஏமாற்றி கிட்னியை விற்ற கணவனை காவல்துறையினர் கைது செய்தனர். ஒடிசா மாநிலத்தில் கோடமேட்டா என்ற பகுதியைச் சேர்ந்தவர் பிரசாந்த். வங்கதேசத்தைச் சேர்ந்த இவர் ஒடிசாவுக்கு அகதியாக வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கும் ரஞ்சிதா என்பவருக்கும் திருமணம் நடந்தது. அப்போதுதான் இவர் மது போதைக்கு அடிமையானவர் என்ற விஷயம் ரஞ்சிதாவுக்கு தெரியவந்தது. இருந்தாலும் இவருடன் குடும்பம் நடத்த நினைத்த […]

You May Like