தமிழகத்தில் தற்போது 12ம் வகுப்பு பொது தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், மாற்றுத்திறனாளிகள் தேர்வு எழுதுவதற்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் சொல்வதை எழுதுவதற்கு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இந்த நிலையில், அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றில் தேர்வு மையத்தில் 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக ஆசிரியர் ஒருவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது திருப்புட்குழி அரசு மேல்நிலை பள்ளி தேர்வு மையத்தில் 11-ம் வகுப்பு அரசு பொது தேர்வுகள் நடந்தது. இதில் முரசவாக்கம் பகுதியை சேர்ந்த ஒரு மாற்றுத்திறனாளி மாணவி அரியர் தேர்வை எழுதுவதற்கு தனியார் பள்ளி ஆசிரியர் ஜெகநாத் உதவி செய்வதற்காக அரசால் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில், அந்த மாணவிக்கு அந்த ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அந்த மாணவி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர், இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த சம்பவம் குறித்து ஆசிரியர் ஜெகநாத்தை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.