தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை 9,40,000 மாணவ, மாணவியர் எழுதினர். இதற்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணி அளவில் தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 91.39 சதவீதம் மாணவ மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 4,30,710 மாணவிகளும், 4,04,904 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர் 3718 பள்ளிகளில் 100% மாணவர் மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் தமிழ் பாடத்தில் ஒருவர் கூட முழுமையான மதிப்பெண்களை பெறவில்லை என்பது வருத்தத்திற்குரிய விஷயமாக இருக்கிறது.
இதில் சென்னை 89.14%, செங்கல்பட்டு 84.27%, திருவள்ளூர் 88.80%, சதவீதம் ராணிப்பேட்டை 83.54% மற்றும் காஞ்சிபுரம் 90.28% மதிப்பெண்களுடன் மிகவும் பின்தங்கி இருக்கிற நிலையில், பெரம்பலூர் மாவட்டம் 97.67% பெற்று முதலிடத்தை பிடித்து இருக்கிறது. சிவகங்கை மாவட்டம் 97.53% தேர்ச்சி பெற்று 2வது இடத்தையும், 96.22% தேர்ச்சி பெற்று விருதுநகர் 3வது இடத்தையும் கைப்பற்றியுள்ளது.
இத்தகைய நிலையிதான் 10ம் வகுப்பில் ஒருவர் கூட 500க்கு 500 மதிப்பெண்கள் பெறவில்லை என்ற தகவல் அதிர்ச்சி அளிக்கும் விதத்தில் இருக்கிறது. திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார், ஆகவே அவருக்கு பாராட்டுக்களும், பரிசுகளும் குவிந்து இருக்கின்றன. இதனை தொடர்ந்து, 10ம் வகுப்பு தேர்வில் 500க்கு 500 மதிப்பெண்கள் எடுக்கும் மாணவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், 10ம் வகுப்பு பொது தேர்வில் ஒருவர் கூட இந்த இலக்கை எட்டவில்லை என்று சொல்லப்படுகிறது.