fbpx

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக போக்குவரத்து துறை சார்பாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள்….!

பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களை பொதுமக்கள் தங்களுடைய சொந்த ஊர்களில் கொண்டாடுவதற்கு வசதியாக பண்டிகை காலங்களில் தமிழக அரசின் சார்பாக தமிழ்நாடு முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில், தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் எந்த விதமான சிரமமும் மற்றும் எந்த விதமான இடையூறும் இல்லாமல் சுலபமாக தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று வர வசதியாக தலைநகர் சென்னையில் இருந்து தமிழ்நாடு முழுவதும் தமிழக போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றனர்.

அந்த வகையில், சென்னையிலிருந்து இயக்கப்படும் 6796 சிறப்பு பேருந்துகளில் இதுவரையில் 3.94 லட்சம் மக்கள் பயணம் செய்திருப்பதாக தமிழக போக்குவரத்து துறை தெரிவித்திருக்கிறது தலைநகர் சென்னையில் இருந்து பொங்கல் சிறப்பு பேருந்துகளில் செல்ல இதுவரையில் 1.78 லட்சம் பேர் முன்பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இன்று தலைநகர் சென்னையிலிருந்து 2100 தினசரி பேருந்துகளுடன் 2010 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.

Next Post

’நேத்து தானே போனேன்... இன்னைக்கும் போகணுமா?’ எல்லாம் தலையெழுத்து..!! சிறுவனின் கியூட் வீடியோ..!!

Sat Jan 14 , 2023
சமூக வலைதளங்கள் எப்போதும் பல ஆச்சரியமான தகவல்கள் மற்றும் வீடியோக்களை மிக விரைவில் பலரிடத்திலும் கொண்டு போய் சேர்த்துவிடும் வல்லமை படைத்தது. மக்களின் மனதை தொடும் விஷயங்கள் எப்போதுமே இணையத்தில் வெகு விரைவில் வைரலாகிடும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் கியூட்டாக மேற்கொள்ளும் விஷயங்கள் குறித்த வீடியோக்கள் மக்களிடையே அதிக அளவில் ஷேர் செய்யப்படும். அந்த வகையில், பள்ளி செல்ல மறுத்து அடம்பிடிக்கும் சிறுவனின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி […]
நேத்து தானே போனேன்... இன்னைக்கும் போகணுமா?

You May Like