fbpx

மாணவியை கர்ப்பமாகிய சக- மாணவர்கள்…அதிர்ச்சியில் பெற்றோர்…!

திருவள்ளூரில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியை உடன் படிக்கும் மாணவர்கள் ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவள்ளூர் நகரின் நடுவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் திருவள்ளூரில் உள்ள 15 வயது சிறுமி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில் அதே பள்ளியில் உடன்படிக்கும் வேப்பம்பட்டை சேர்ந்த 2 மாணவர்களுடன் அந்த மாணவி நட்பாக பழகி வந்துள்ளார். இந்த நிலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்ல தயாராக இருந்த மாணவியை, மாணவர்கள் இருவரும் நைசாக பேசி வேப்பம்பட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மாணவியும் தனது நண்பர்களுடன் அங்கு சென்றார். வேப்பம்பட்டிலுள்ள மாணவர்களில் ஒருவரது வீட்டுக்கு மாணவி சென்றபோது அவர்கள் வீட்டில் யாரும் இல்லை. அப்போது மாணவர்கள் இருவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர் இதுபற்றி யாரிடமும் கூறக்கூடாது என்று கூறி மாணவியை அனுப்பி வைத்தனர். இதற்கிடையே அந்த மாணவி கர்ப்பம் அடைந்தார். இதுபற்றி அவரது பெற்றோர் விசாரித்தபோது தான், மாணவியின் கூடபடிக்கும் மாணவர்கள் அவர்களது மகளிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் தாய் திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் மாணவர்கள் இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Baskar

Next Post

’வகுப்பில் எடுக்கும் மதிப்பெண் மட்டுமே வாழ்க்கையை தீர்மானிக்காது’..! அமைச்சர் அன்பில் மகேஷ்..!

Thu Jul 21 , 2022
தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியின் வெற்றியை நிலைநிறுத்த மாணவ, மாணவிகளுக்கு மன அழுத்தத்தை கொடுக்கக் கூடாது என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் ஜி.கே.உலக பள்ளியில் ராணிப்பேட்டை, வேலூர் திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட பள்ளி கல்வித்துறை அலுவலர்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராணிப்பேட்டை மாவட்டம் கல்வியில் […]
’Resign Anbil Mahesh’ ஹேஷ்டேக் எதிரொலி..? கல்வித் தொலைக்காட்சி சிஇஓ நியமனம் நிறுத்திவைப்பு..! - அமைச்சர்

You May Like