fbpx

இனி இது போன்ற சம்பவம் எந்த மாணவிக்கும் நடக்கக்கூடாது ஸ்ரீமதியின் தந்தை உருக்கம்..!

கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்த மாணவி ஸ்ரீமதி, கடந்த 13ம் தேதி பள்ளி வளாகத்தில் மரணமடைந்தார். மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக மாணவியின் குற்றம்சாட்டினர். மரணத்திற்கு நீதி கேட்டு நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. இதில் 300 க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டனர். நீதிமன்ற உத்தரவால் மாணவியின் உடல் மறு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து இன்று மாணவி ஸ்ரீமதியின் உடல் அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, சொந்த ஊரான கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தில் மாணவியின் உடல் சற்றுமுன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மீண்டும் கலவரம் எதுவும் நிகழாமல் தடுக்க பெரியநெசலூர் கிராமத்தை காவலர்களின் கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.
மாணவி ஸ்ரீமதியின் உடலோடு அவரது பாட புத்தகம் சேர்த்து கட்டப்பட்டது. ஸ்ரீமதி மருத்துவம் படிக்க ஆசைபட்டார். இதனால் அவரது ஆசையை நிறைவேற்ற உயிரியல் புத்தகம் மாணவியின் உடலுடன் சேர்த்து புதைக்கப்பட்டது.

பெரியநெசலூர் மயானத்தில் முதல் முறையாக 100 க்கும் மேற்பட்ட பெண்கள் குவிந்துள்ளனர். மயானத்தில் நடைபெறும் இறுதி சடங்கில் அதிமுக எம்எல்ஏ அருண்மொழி தேவன், அமைச்சர் கணேசன் மற்றும் மூவேந்தர் முன்னேற்ற கழக தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் போன்ற அரசியல் தலைவர்களும் கலந்துகொண்டனர். ஈமச்சடங்கு முடிந்தவுடன், மாணவியின் தந்தை ராமலிங்கம் அளித்த பேட்டியில் கூறியது, நான் என் மகளை புதைக்கவில்லை, விதைத்திருக்கின்றேன். அவள் மரமாக வளர்ந்து இதற்கு காரணமானவர்களை வேரறுப்பாள், இனி இது போன்ற சம்பவம் எந்த மாணவிக்கும் நடைபெறக்கூடாது. என் மகள் மரணத்தில் பள்ளி தாளாளர், அவரது மனைவி, மகன்கள், பள்ளி ஆசிரியைகள் மூன்று பேர் என மொத்தம் ஏழு பேர் குற்றவாளிகள், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்.
தமிழக அரசு தற்போது வேகமாக வழக்கை விசாரித்து வருகிறது. நீதி கிடைக்கும் என நம்புகிறேன் என்று கூறினார்.

Baskar

Next Post

குரூப் 4 தேர்வு.. நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயங்கப்படும்..

Sat Jul 23 , 2022
நாளை குரூப் 4 தேர்வு நடப்பதை ஒட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.. 7,301 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 எழுத்து தேர்வு, தமிழகம் முழுவதும் நாளை காலை 9.30 மணி முதல் 12:30 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ் மொழியில் கட்டாயம் 40 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே தகுதி பெறமுடியும்.. இந்த தேர்வுக்கு தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களிலும் 316 வட்டங்களில் […]

You May Like