தற்போதயெல்லாம் நீதிமன்றம், காவல் நிலையம் போன்ற இடங்களில் கொலை, துப்பாக்கிச் சூடு போன்ற சம்பவங்கள் நடைபெறுவது சர்வசாதாரணம் என்று ஆகிவிட்டது.
அந்த வகையில், டெல்லியில் உள்ள சாகோத் நீதிமன்றத்தில் இன்று வழக்கறிஞர் உடையில் ஒரு பெண் வருகை தந்தார். அந்த பெண் திடீரென்று நடத்தி துப்பாக்கி சூடு காரணமாக, படுகாயம் அடைந்தார் அவரை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அத்துடன் இந்த விவகாரம் குறித்து டெல்லி காவல்துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி இருக்கிறார்கள் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது எதற்காக? அந்த பெண்ணை கொலை செய்வதற்காக அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதா? என்ற பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள்.