அமெரிக்காவின் பிரபல நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை இருக்கிறார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவர் தற்போது சென்னையில் தான் வளர்ந்த வீட்டை அவர் விற்பனை செய்து விட்டார் என்பது யாருக்காவது தெரியுமா? அந்த வீட்டை விற்பனை செய்த போது சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை கண்கலங்கி நின்றதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.
அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தமிழகத்தைச் சேர்ந்த இவர், மதுரையில் ரகுநாத பிச்சை, லட்சுமி தம்பதிகளுக்கு பிறந்த இவர், சென்னையில் தான் வளர்ந்தார். சென்னை அசோக் நகர் பகுதியில் சுந்தர் பிச்சை பிறந்து வளர்ந்து வந்த வீட்டை தற்போது அவர் விற்பனை செய்துள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது.
அவர் பிறந்து வளர்ந்த அசோக் நகர் வீடு சுந்தர் பிச்சையின் தந்தை ரகுநாத பிச்சை வாங்கிய முதல் சொத்து என்று கூறப்படுகிறது. இதே வீட்டில் சுந்தர் பிச்சை வசித்துக் கொண்டிருந்தபோது பள்ளி படிப்பை முடித்திருக்கிறார். கரக்பூர் ஐஐடி நிறுவனத்தில் மேற்படிப்பை முடித்து அதன் பின்னர் படிப்படியாக கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்ற பதவி வரையில் உயர்ந்து விட்டார் சுந்தர் பிச்சை.
அசோக் நகர் வீட்டை விற்பனை செய்துவிடலாம் என்று ரகுநாத பிச்சை முடிவு செய்ததையடுத்து அந்த தகவல் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் மணிகண்டனுக்கு தெரிய வந்திருக்கிறது இதனைத் தொடர்ந்து சுந்தர் பிச்சை வசித்து அந்த வீடு என்பதால் அதை வாங்குவதற்கு மணிகண்டன் முடிவு செய்துள்ளார்.
ரகுநாத பிச்சை அமெரிக்காவில் இருந்ததால் வீட்டை வாங்குவதற்கு சுமார் 4 மாத காலங்கள் தாமதமாகி உள்ளது. வீட்டை வாங்கிய பிறகு சொத்து ஆவணங்களை ரகுநாத பிச்சை மணிகண்டனிடம் ஒப்படைத்த போது அவர் கண்கலங்கியதாக பிரபல செய்தி ஊடகம் ஒன்றுக்கு மணிகண்டன் தெரிவித்திருக்கிறார்.
இவரும் ரகுநாத பிச்சையும் முதன்முறை சந்தித்தபோது சொத்து ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அப்போது மணிகண்டனுக்கு சுந்தர் பிச்சையின் தாயார் பில்டர் காப்பியும் போட்டு கொடுத்திருக்கிறார் என்பது ருசிகர தகவலாக இருக்கிறது.
ரகுநாத பிச்சையே பதிவாளர் அலுவலகத்தில் வெகு நேரம் காத்திருந்து, அனைத்து வரிகளையும், செலுத்தி சொத்து ஆவணங்களை தன்னிடம் வழங்கியதாக மணிகண்டன் கூறி இருக்கிறார். வேலைகளை வேகமாக முடிப்பதற்காக எந்த இடத்திலும் தன்னுடைய மகன் சுந்தரின் பிச்சையின் பெயரை ரகுநாத பிச்சை பயன்படுத்தவில்லை என்று மணிகண்டன் கூறியுள்ளார்.
சுந்தர் பிச்சை தற்போது அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் 31.17 ஏக்கர் பரப்பளவில் இருக்கின்ற ஆடம்பர வீட்டில் வசித்து வருகிறார். இந்த வீட்டை சுமார் 40 மில்லியன் டாலருக்கு சுந்தர் பிச்சை வாங்கியதாக கூறப்படுகிறது.