உலகம் முழுவதும் கோடிக்கணக்கான நபர்கள் வாட்சப் செயலியை பயன்படுத்தி வருகிறார்கள். அதன் காரணமாக வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோரின் வசதிக்கு ஏற்றவாறு அந்த நிறுவனம் நாள்தோறும் புது, புது விதமான ஆப்பரேட்டுகளை வெளியிட்டு பயனர்களை மகிழ்வித்து வருகிறது. அதன்படி தற்சமயம் வாட்ஸப் செயலி சைட் பை சைட் என்ற புதிய அம்சத்தை ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளுக்கு அறிமுகம் செய்திருக்கிறது.
அதன் அடிப்படையில் இந்த அம்சத்தின் மூலமாக ஏற்கனவே இருக்கின்ற சேட்டிலிருந்து வெளியேறாமல் மற்றொரு சேட்டை தொடங்க அனுமதிக்கும் இதன் காரணமாக, நம்முடைய உரையாடல்களை எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் தொடர இயலும் தேவைப்பட்டால் இந்த அமைப்பை நிறுத்தி வைத்துக் கொள்ளவும் முடியும். இதனை பெறுவதற்கு பயனர்கள் வாட்சப் செட்டிங்கிற்கு சென்று சேட் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.