fbpx

விரைவில் டிஜிட்டல் மயமாகிறது தமிழக அரசு பள்ளிகள்…..! பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் போட்ட அதிரடி உத்தரவு…..!

நேற்று தமிழகத்தின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் உஷா, பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தொடக்கக்கல்வி இயக்குனர் அறிவொளி உள்ளிட்ட பலர் பங்கேற்று கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த சரியான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் கழிவறை மற்றும் குடிநீர் வசதிகளை மேம்படுத்த வேண்டும் அதோடு எமிஸ் இணையதள பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் பழைய காகித கோப்புகளை டிஜிட்டல் முறையில் மாற்றுவதுடன் நவீன முறையில் மடிக்கணினி மற்றும் கணினிகளை பயன்படுத்த வேண்டும் இதற்கு தேவைப்படும் பயிற்சிகளை வழங்க அரசு தயாராக இருக்கிறது. இதை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அதோடு இதன் மூலமாக அடுத்த கல்வியாண்டில் தமிழகத்தில் இருக்கின்ற அரசு பள்ளிகள் டிஜிட்டல் முறையில் மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு அலெர்ட்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!

Mon May 1 , 2023
தமிழகத்தில் ராணிப்பேட்டை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கோடை வெப்பம் வாட்டி வதைந்து வந்த நிலையில், ஒரு சில மாவட்டங்களில் சாரல் மழை பெய்து மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், தமிழகத்தின் 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் நாளை […]

You May Like