fbpx

தமிழ்நாட்டில் புதிய நிலக்கரி சுரங்கமா…..? ம்ஹ்ம்ம் செல்லாது செல்லாது….! மத்திய அரசுக்கு ஷாக் கொடுத்த உதயநிதி ஸ்டாலின்…..!

உள்நாட்டு நிலக்கரி உற்பத்தியை அதிகரிப்பதிவு தன்னுடைய கவனத்தை மத்திய அரசு செலுத்தி வருகிறது. 6வது நிலக்கரி சுரங்க ஏலத்தில் தேர்வான 29 சுரங்கங்களின் நிலக்கரி விற்பனை குறித்த ஏழாவது சுற்று ஏலம் சென்ற மார்ச் மாதம் 29ஆம் தேதி அதன்படி ஜார்கண்ட், ஒடிசா, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, பீகார், சத்தீஸ்கர் போன்ற 11 மாநிலங்களில் 106 நிலக்கரி சுரங்கங்கள் புதிதாக அமைப்பதற்கு ஏலம் கோரப்பட்டது.

அதிலும் குறிப்பாக தமிழகத்தில் டெல்டா பகுதியாக விளங்கிவரும் தஞ்சை, அரியலூர், கடலூர் போன்ற மாவட்டங்களில் புதிதாக நிலக்கரி சுரங்கங்களை அமைப்பதற்கு ஏலம் கோரப்பட்டு இருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பதற்கு விவசாயிகள் கடுமையான எதிர்ப்பை கூறி இருக்கிறார்கள்.

அத்துடன் புதிய நிலக்கரி திட்டங்கள் தமிழகத்திற்கு பேரழிவை ஏற்படுத்தும் நிலக்கரி சுரங்கம் மூலமாக காவிரி டெல்டா பகுதியை மத்திய அரசு முற்றிலுமாக அழிக்க முயற்சி செய்கிறது. அரியலூர், கடலூர், தஞ்சை போன்ற காவிரி பாசன மாவட்டங்களில் செயல்படுத்தப்படவிருக்கும் 5 புதிய நிலக்கரி திட்டங்கள் உள்ளிட்டு இருக்கு தமிழக அரசு அனுமதி வழங்காது.

இந்த திட்டங்களுக்கு நிலத்தை கையகப்படுத்தியும் கொடுக்காது என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளிக்க வேண்டும், அதன் மூலமாக தமிழக மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள் ஒன்றை விடுத்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து உரையாற்றிய தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், புதிய நிலக்கரி சிரங்குகளை தமிழக அரசு எப்போதும் அனுமதிக்காது பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக இருக்கும் திருவாரூர் தஞ்சை போன்ற பகுதிகளில் பழுப்பு நிலக்கரி எடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது. இது குறித்து சட்டப்பேரவையில் நாளைய தினம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார் என்று கூறியுள்ளார்.

Next Post

மூத்த குடிமக்களுக்கான அசத்தல் திட்டம்.. ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம்.. வட்டி விகிதம் எவ்வளவு..?

Tue Apr 4 , 2023
சாமானிய மக்களுக்கு உதவும் வகையில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.. அந்த வகையில் மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டம் தான் மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (Senior Citizen Savings Scheme- SCSS). இது 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட இந்திய மூத்த குடிமக்களுக்கான சேமிப்புத் திட்டமாகும். மற்ற சேமிப்புத் திட்டங்களை விட அதிக வட்டி விகிதத்தை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள மூத்த குடிமக்களுக்கு […]

You May Like