தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி முதல் 20 ஆம் தேதி வ்ரையில் பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் சுமார் 19, 40000 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதேபோல மார்ச் மாதம் 13ம் தேதி முதல் 5ஆம் தேதி வரையில் நடைபெற்ற 11 ஆம் வகுப்பு பொது தேர்வில் தமிழகம் புதுச்சேரி முடித்த பகுதிகளை சேர்ந்த சுமார் 770000 மாணவர்கள் பங்கேற்றுக் கொண்டனர். இந்த நிலையில், 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகியிருக்கின்றன. இந்த தேர்வு முடிவுகளை மாணவர்கள் www.tnresults.nic.in , www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in உள்ளிட்ட இணையதளங்கள் மூலமாக தெரிந்து கொள்ளலாம் தமிழகத்தில் 91.39 சதவீதம் பேர் 10ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ம் வகுப்பில் 4,30,710 மாணவிகளும், 4,04,904மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதாவது, மாணவர்களை விட மாணவிகள் 6.50 சதவீதம் அதிகமாக தேர்ச்சி பெற்றுள்ளனர் 3718 பள்ளிகளில் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதேபோல பள்ளி மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்கள் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தியின் மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதைத் தவிர்த்து, பள்ளி மாணவர்கள் தங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.