fbpx

தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வெளியான செம அறிவிப்பு…..! இனி பணம் கொண்டு செல்ல தேவையில்லை போன் மட்டும் எடுத்துச் சென்றால் போதும்….!

தற்போது உள்ள டிஜிட்டல் உலகத்தின் எல்லோரின் கைகளிலும் கைபேசி பயன்பாடுகள் அதிகரித்து காணப்படுகிறது .ஆகவே கூகுள்பே, போன்பே உள்ளிட்ட பண பரிவர்த்தனை செயலிகளும் அனைவரின் கைபேசிகளிலும் இருக்கிறது டீ குடித்துவிட்டு 10 ரூபாய் பணம் செலுத்த வேண்டும் கடைகளில் இருக்கின்ற OR கோடு அட்டை மூலமே ஸ்கேன் செய்து செலுத்துகிறார்கள் தற்போதைய தலைமுறையினர்.

அதேபோல சிறிய அளவிலான கிராமங்களில் கூட OR code அட்டை மூலமாக பணம் செலுத்தும் வசதி வந்து விட்டது. இருந்தாலும் கூட தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் சில்லறையாக பணம் கொடுத்து விட்டு சர்க்கரை, கோதுமை போன்ற பொருட்களை வாங்க வேண்டிய சூழ்நிலை இன்றும் நிலவுகிறது.

ஆகவே நியாய விலை கடைகளில் பணம் செலுத்தும் முறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என வாடிக்கையாளர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தநிலையில், தமிழக கூட்டுறவுத்துறை பொதுமக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதாவது, அனைத்து நியாய விலை கடைகளிலும் கூகுள்பே மற்றும் பேடிஎம் மூலமாக பணம் பரிவர்த்தனை செய்யலாம் என்று கூட்டுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தத் திட்டம் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்தகைய நிலையில், தமிழ்நாடு முழுவதும் மே மாதம் முடிவதற்குள் இந்த திட்டம் அமலுக்கு வரும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதோடு இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலை கடைகளிலும் யூபிஐ மூலமாக பணம் செலுத்திக் கொள்ளலாம் என்றும் சொல்லப்பட்டது.

Next Post

வரும் 15ஆம் தேதி உள்ளூர் விடுமுறை….! மாவட்ட ஆட்சியர் அறிவிப்பால் குஷியான மாணவர்கள் எந்த மாவட்டம் தெரியுமா….?

Wed May 10 , 2023
தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை தினங்களில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக சித்திரை மாதம் பிறந்து விட்டால் பல கோவில்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்ப்பதற்கு பொதுமக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ கங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாகவும், இந்த […]

You May Like