fbpx

தமிழகத்தில் இந்த 12 மாவட்டங்களில் இன்று கனமழை….! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை….!

இன்று வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையும் தமிழகப் பகுதிகளின் மேல் நிலை வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் போன்ற மாவட்டங்களில் ஒரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல நாளை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் கொண்ட ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கொடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது எனவும், நீலகிரி, திருப்பூர், கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, சேலம், ஈரோடு, நாமக்கல் மற்றும் கரூர் போன்ற மாவட்டங்களில் ஓர் இரு பகுதிகளில் கனமழை பெய்ததற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

அதோடு வரும் 22ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு இடங்களில் லேசாந்து முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

அதேபோல இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல், 40 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கக்கூடும் என்று கூறப்பட்டிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை மற்றும் அதிகபட்ச ஈரபதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் காரணமாக அசவுகரியம் உண்டாகலாம் என்றும் கூறப்படுகிறது.

தலைநகர் சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸில் இருந்து 39 டிகிரி செல்சியஸ் வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸிலிருந்து 29 டிகிரி செல்சியஸ் வரையில் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

தேனி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை…..!

Sat May 20 , 2023
தமிழகத்தில் சென்ற ஒரு மாத காலமாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி இருக்கின்ற தேனி மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் பல பகுதிகளில் 100 டிகிரி பாரான்ஹீட்டுக்கும் மேல் வெப்பநிலை பதிவாகி இருந்தது. இந்த சூழ்நிலையில், வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்றுடன் லேசானது […]

You May Like