fbpx

18 மாவட்டங்களில் இன்று கனமழை……! இன்றைய வானிலை ஆய்வு மைய முக்கிய அறிவிப்பு….!

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வடக்கு தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. ஆகவே தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல கீழே எடுத்து சுழற்சி நிலவி வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படும் இது வரும் 9ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய வங்க கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.

அதோடு இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, கோவை, நீலகிரி, நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர் போன்ற மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓர் இரு பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.

நாளைய தினம் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதேபோல ஒரு 9ம் தேதி மற்றும் 10ஆம் தேதி வரையில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற இடங்களில் ஓர் ஒரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Next Post

அதிர்ச்சி சம்பவம்…..! சென்னை மைசூர் வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல்….!

Sun May 7 , 2023
நாட்டில் மத்திய அரசாங்கத்தால் வந்தே பாரத் ரயில் சேவைகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ரயில் சேவைகளுக்கு பயணிகள் இடையே நல்ல வரவேற்பு காணப்படுகிறது இந்த நிலையில் அடிக்கடி வந்தே பாரத் ரயில் மீது கல்வீச்சு தாக்குதல் சம்பவங்களும் நடந்து வருகிறது. அந்த வகையில், இதுவரையில் வந்தே பாரத் ரயில் மீது ஆறு முறைக்கு மேல் கல்வி தாக்குதல் நடைபெற்று உள்ளது. இதே போன்ற ஒரு சம்பவம் நேற்றைய தினமும் அரங்கேறி […]

You May Like