fbpx

வங்கக்கடலில் ஏற்படுகிறது புதிய புயல் சின்னம்…..! இந்த தேதி வரையில் தமிழகத்தில் மழை தான் வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…..!

தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் உருவாகியிருக்கின்ற வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நாளை காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. இது வரும் செவ்வாய்க்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி வடக்கு திசை நோக்கி நகர்ந்து மத்திய வங்க கடல் பகுதியில் புயலாக வலுப்பெறலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இதன் காரணமாக, இன்று முதல் வரும் 10ம் தேதி வரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைநகர் சென்னையில் பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் இருக்கும் என்று வானிலை ஆய்வு கூறி இருக்கிறது.

இதற்கு நடுவே தென்கிழக்கு வங்க கடல் பகுதி மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் மணிக்கு அதிகபட்சமாக 60 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக, அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று வா எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு ஆழ் கடலில் உள்ள மீனவர்கள் இன்று மாலைக்குள் கரை திரும்புமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது

Next Post

இவரை ஞாபகம் இருக்கிறதா…..? புது சீரியலில் களமிறங்கும் பெப்சி உமா…..?

Sun May 7 , 2023
பொதிகை தொலைக்காட்சியில் இருந்து தன்னுடைய சினிமா பயணத்தை ஆரம்பித்து அதன் பிறகு சன் தொலைக்காட்சிக்கு வந்தவர் தான் பெப்சி உமா. இவர் உங்கள் சாய்ஸ் என்ற நிகழ்ச்சியின் மூலமாக மக்களின் மனதையும் கொள்ளையடித்தவர் என்று சொன்னால் அது மிகையாகாது. அந்த நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான இவரை கதாநாயகியாக மாற்ற பல இயக்குனர்கள் முயற்சி செய்தார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினி கூட அவருடன் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு கேட்டுக்கொண்டார். ஆனாலும் அவர் […]

You May Like