fbpx

தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம் தொடர்ச்சியாக வரும் விடுமுறை…..! தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு…..!

தமிழ் புத்தாண்டாம் சித்திரை மாதம் முதல் நாளை உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லோரும் தமிழ் வருட பிறப்பாக மிக சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடி வருவார்கள். அந்த வகையில் இந்த வருடம் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி நாளைய தினம் தமிழ் புத்தாண்டு பிறக்க உள்ளது.

இதனை தொடர்ந்து, நாளை வெள்ளிக்கிழமை என்பதால் அதற்கடுத்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருகிறது. ஆகவே சென்னை கோயம்பேட்டில் இருந்து இன்று கூடுதலாக 500 பேருந்துகளை இயக்குவதற்கு தமிழக போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது.

அதோடு வரும் 22ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை வர உள்ளதால் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி 500 சிறப்பு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை கூறியுள்ளது. விழுப்புரம், கும்பகோணம், கோவை, சேலம் மற்றும் மதுரை போன்ற பகுதிகளுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

விடுமுறை காலங்களில் பொதுமக்கள் பேருந்து நிலையங்களில் வாகனங்களுக்கு அலைமோதி தவித்து நிற்பதை கட்டுக்குள் வைப்பதற்காக இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

“அமித்ஷா பற்றி உதயநிதி பேசியதில் என்ன தவறு..” முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்..

Thu Apr 13 , 2023
சட்டப்பேரவையில் அமித்ஷா பெயரை குறிப்பிட்டு உதயநிதி பேசியதில் எந்த தவறும் இல்லை என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. தமிழக சட்டப்பேரவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விளையாட்டு துறை மீதான மானியக்கோரிக்கை நடைபெற்றது.. அப்போது விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி பேசிய போது, அனைத்து உறுப்பினர்களுக்கும் ஐபிஎல் பாஸ் வழங்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வேலுமணி கேட்டிருந்தார்.. அதற்கு பதிலளித்த உதயநிதி “ ஐபிஎல் போட்டியை பிசிசிஐ என்ற […]

You May Like