fbpx

தமிழக அரசு உடனடியாக இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்……! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்……!

தமிழகத்தில் முத்திரைத்தாள் விலையை 10 மடங்கு அதிகரித்து விற்பனை செய்ய ஏற்றவாறு சட்டசபையில் ஒரு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில், குடிநீர் வரி பால் விலை மின்கட்டணம் சொத்து வரி போன்றவற்றின் உயர்வை அடுத்து முத்திரைத்தாள் கட்டணமும் அதிகரித்து இருப்பதாக சுமத்தி இருக்கிறார். தமிழகத்தில் அரசு நிர்ணயம் செய்யும் வழிகாட்டி மதிப்பை விட சந்தை விலை 50% அதிகமாக இருப்பதாகவும் வழிகாட்டி மதிப்பு 33 சதவீதம் அளவு அதிகரித்து இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் சாமானியர்கள் நிலம் மற்றும் வீடு வாங்குவதை முடக்கி வைக்கும் விதமாக இந்த நடவடிக்கை உள்ளது என்று குற்றம் சுமத்தி இருக்கிறார் அண்ணாமலை.

2022 23ஆம் தேதி ஆண்டில் பத்திரப்பதிவுத்துறை 24 சதவீதம் அளவுக்கு அதிக வருமானம் பெற்றுள்ள நிலையில், ஏன் இந்த முத்திரைத்தாள் கட்டணமும் வழிகாட்டி மதிப்பும் அதிகரித்து இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஆகவே தமிழக அரசு இந்த சட்ட மசோதாவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அவர் தன்னுடைய அறிக்கையின் மூலமாக வலியுறுத்தியுள்ளார்.

மேலும் சந்தை விலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதால் தமிழக அரசால் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீடு வழங்க மட்டும்தான் புதிய வழிகாட்டி மதிப்பை பயன்படுத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

Next Post

டமால் திடீரென்று உடைந்தது அதிமுக பாஜக கூட்டணி….! தமிழக அரசியலில் ஏற்பட்ட பரபரப்பு….!

Wed Apr 19 , 2023
கர்நாடக மாநிலத்தில் சட்டசபை பொதுத் தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முணைப்பில் பாஜக களமிறங்கியுள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் புலிகேசி நகர் சட்டசபை தொகுதியில் அதிமுக போட்டியிடும் என்று அந்த கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். அதிமுகவின் ஆட்சி மன்ற குழு பரிசீலித்து எடுத்த முடிவின் அடிப்படையில் பெங்களூர் அருகே உள்ள புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அதிமுகவின் […]

You May Like