fbpx

முன் விரோதம் காரணமாக 12 வயது சிறுமியை கடத்திய வாலிபர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பால்கர் மாவட்டம்  வாடா தாலுகாவை சேர்ந்த 12 வயது சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்த போது காரில் வந்த ஒரு கும்பல் சிறுமியை கடத்திச் சென்றனர்.  இது தெரிந்த சிறுமியின் பெற்றோர் வாடா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சிறுமியை மீட்க தீவிர நடவடிக்கைகள் எடுத்தனர். மேலும் தனிப்படைகள் அமைத்து பல இடங்களிலும் தேடினர்.  

சகறுமியை கடத்திச் சென்ற அந்த கும்பல் வாடாவில் இருக்கும் ஒரு பண்ணை வீட்டில் சிறுமியை அடைத்து வைத்திருந்தனர்.  இது குறித்த தகவல்கள் தெரிய வந்ததும் காவல்துறையினர் உடனே அந்த பண்ணை வீட்டிற்கு சென்று அங்கு அடைத்து வைத்திருந்த சிறுமியை பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பின்னர் சிறுமியை கடத்திச் சென்ற வாலிபர் சமீர் தாக்கரே என்கிற அந்த வாலிபரை கைது செய்தனர். 

மேலும் சிறுமியின் பெற்றோருடன் அந்த வாலிபருக்கு ஏற்கனவே பிரச்சனை இருந்துள்ளது. அதற்கு பழிவாங்கும் நோக்கத்துடன் சிறுமியை  தனது நன்பர்களுடன் சேர்ந்து கடத்திச் சென்றுள்ளார், என்பது தெரிய வந்தது. அவருக்கு உடந்தையாக இருந்த நண்பர்களையும் பிடிக்க காவல்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
 

Baskar

Next Post

விவசாயிகளுக்கு அரசு வழங்கும் ரூ.2000... இதற்கான கால அவகாசம் நீட்டிப்பு...

Mon Aug 15 , 2022
பிரதம மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ், நாட்டில் உள்ள சிறு மற்றும் குறு விவசாயிகள் குடும்பங்களுக்கு 6,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. டிஜிட்டல் இந்தியா முன்முயற்சியுடன் இணைந்து, அரசாங்கம் ரூ.2,000 பணத்தை தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக்கணக்கில் செலுத்துகிறது.. ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும், அதாவது ஏப்ரல்-ஜூலை, ஆகஸ்ட்-நவம்பர் மற்றும் டிசம்பர்-மார்ச் என மூன்று தவணைகளில் தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 நிதிப் பலன் தகுதியான விவசாயிகளுக்கு […]

You May Like