fbpx

தந்தை உயிரிழந்த நிலையில் கண்ணீருடன் பிளஸ் 2 தேர்வு எழுத வந்த மாணவி….! கடலூர் அருகே மனதை உருக்கும் சோக சம்பவம்….!

தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பொதுத் தேர்வை எதிர் கொண்டு எழுதி வருகிறார்கள்.

அந்த விதத்தில் கடலூர் மாவட்டம் திருப்பாதிப்புலியூரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அந்தப் பள்ளியில் கிரிஜா என்ற பனிரெண்டாம் வகுப்பு மாணவி வேதியியல் பாடம் தேர்வை எழுதினார்.

அப்போது அவருடைய உறவினர்கள் பள்ளிக்கு வெளியே சோகமாக நின்றவாறு இருந்தனர். இதனை தொடர்ந்து, அவர்களிடம் கேட்டபோது பள்ளி மாணவி கிரிஜா என்பவரின் தந்தை பழைய வண்டி பாளையம் பகுதியைச் சேர்ந்த ஞானவேல் (45) என்பவர் பொம்மை செய்யும் தொழிலாளியாக இருந்து வந்தார் என்ற விவரம் தெரிய வந்தது.

இந்த நிலையில் இன்று அதிகாலை ஞானவேல் உடல் நலக்குறைவு காரணமாக, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்து அதிர்ச்சிக்குள்ளான அவருடைய மகன் கிரிஜா இன்று 12 ஆம் வகுப்பு கடைசி தேர்வு என்பதால் தன்னுடைய தந்தை இறந்ததை தொடர்ந்து, கல்வியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு இன்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்து தேர்வு எழுதி இருக்கிறார். இந்த சம்பவம் பள்ளி மற்றும் கிராம மக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

விமானத்தின் அளவு கொண்ட மிகப்பெரிய விண்கல்.. ஏப்.6-ல் பூமியை நெருங்குகிறது.. நாசா எச்சரிக்கை..

Tue Apr 4 , 2023
சூரிய குடும்பம் பிறக்கும்போது முழுமையாக உருவாகாத ஒரு சிறிய கிரகம் தான் விண்கல் என்று அழைக்கப்படுகிறது. சூரியனை சுற்றி மில்லியன் கணக்கான சிறுகோள்கள் வலம் வருகின்றன. விண்கற்கல் பொதுவாக சூரியனில் இருந்து வெவ்வேறு தூரங்களில் வெவ்வேறு இடங்களில் உருவாகின்றன. அவை வெவ்வேறு வகையான பாறைகளால் ஆனவை. எனவே பூமிக்கு அருகில் விண்கற்கள் கடந்து செல்வது வழக்கமாக நடக்கும் நிகழ்வு தான்.. ஆனால் சில சமயங்களில் விண்கற்களின் அளவை பொறுத்து அவை […]

You May Like