தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் நியாய விலை கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக அரிசி, மலிவான விலையில் கோதுமை, சமையல் எண்ணெய், சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதேபோல மலிவான விலையில் மன்னனையும் வழங்கப்பட்டு வருகிறது அதோடு அரசின் நிதி உதவியும் இதன் மூலமாகவே வழங்கப்பட்டு வருகிறது. ஆகவே ஏழை, எளிய மக்கள் இதன் மூலமாக வெகுவாக பயனடைந்து வருகிறார்கள்.
இத்தகைய சூழ்நிலையில், நியாய விலை கடைகளில் வாங்கப்படாத பொருட்களுக்கு பில் போடுவது, அல்லது குறுஞ்செய்தி அனுப்புவது போன்ற சட்டவிரோத செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரேஷன் கடை பணியாளர்களுக்கு கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.