டெல்லி சராய் காலே கான் பகுதியில் இருக்கின்ற பேருந்து நிலையம் அருகே இன்று அதிகாலை துண்டாக்கப்பட்ட மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும், அடையாளம் காண்பதற்கு ஒரு தடயவியல் குழு நிறுத்தப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. பெண்ணின் சடலமாக இருக்கலாம் என்று காவல்துறை சந்தேகிக்கிறது.
அதோடு, பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டு அதன் பிறகு பல துண்டுகளாக வெட்டப்பட்டு, பிளாஸ்டிக் பைக்குள் போட்டு அப்புறப்படுத்தப்பட்டு இருக்கலாம் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது. உடல் உறுப்புகள் அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கியதை தொடர்ந்து, அந்த பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து இருக்கிறார்கள்.
ஒரு பெண்ணின் உடல் உறுப்பு தான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பைகளை திறந்து பார்த்தபோது ஒரு பெண்ணின் மண்டை ஓடு உடுப்பு பகுதிகள் மற்றும் உள்ளங்கையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. குற்றம் நடைபெற்ற இடத்தை தடயவியல் குழு ஆய்வு செய்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
கொலை வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் இந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் டெல்லியில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.