fbpx

காதலியை வீடியோ எடுத்து நண்பர்களுடன் சேர்ந்து மிரட்டிய காதலன் அதிரடி கைது…!

தற்காலத்து இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் உள்ளிட்டோர் அனைத்து விஷயங்களையும் மிகவும் அவசரப்படுகிறார்கள். இந்த அவசரம் பல சமயங்களில் அவர்களுடைய வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விடுகிறது.

தற்போதைய இளம் பெண்கள் யாராவது ஒரு இளைஞர் வந்து தன்னை காதலிப்பதாக சொன்னால் அவர் நல்லவரா? கெட்டவரா? என்று எதையும் யோசிக்காமல் தங்களுடைய மனதையும் பறி கொடுத்து விடுகிறார்கள்.

அப்படி இளம் பெண்கள் நம்பி காதலிக்கும் நபர்கள் அவர்களை தவறான முறையில் பயன்படுத்தினால் என்ன நடக்கும்? என்பதை பல சம்பவங்கள் சுட்டி காட்டிக் கொண்டே தான் இருக்கிறது. ஆனாலும் தற்போதைய இளம் பெண்கள் சமுதாயம் திருந்துவதே இல்லை.

அந்த வகையில், தான் மதுரை மேலூர் பகுதியில் ஒரு சம்பவம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

மதுரையை சார்ந்த ஒரு 17 வயது சிறுமியை காதல் என்ற பெயரை சொல்லி இருவரும் தனிமையில் இருந்தபோது, நண்பர்கள் மூலமாக வீடியோவை எடுத்து அந்த வீடியோவை வைத்து நண்பர்கள் மூலமாக மிரட்டி அந்த சிறுமியிடம் காதலனே பணம், நகை உள்ளிட்டவற்றை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மதுரை மாவட்டம் மங்களம் பட்டியை சேர்ந்த நாகராஜன் என்பவருடைய மகன் சிவராமன் (21) இவருக்கும், மதுரையைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் இடையே பழக்கம் உண்டாகியுள்ளது. இந்த பழக்கம் நாட்கள் செல்ல, செல்ல இருவருக்கும் இடையில் காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்தனர்.

இந்த சூழ்நிலையில் தான் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மதுரை மேலூர் பகுதியில் இருக்கின்ற கீழவளைவு மலைப்பகுதிக்கு அந்த 17 வயது சிறுமியை சிவராமன் அழைத்துள்ளார். காதலன் அழைத்திருக்கிறாரே என்று அந்த சிறுமியும் அவரை நம்பி அந்த பகுதிக்கு சென்றுள்ளார். மலைப்பகுதியில் இருவரும் தனிமையில் இருந்த சமயத்தில், சிவராமன் அந்த சிறுமியிடம் எல்லை மீறி நடந்து கொண்டதாக சொல்லப்படுகிறது. அதனை அங்கு ஏற்கனவே மறைந்திருந்த சில மர்ம நபர்கள் வீடியோவாக பதிவு செய்து இருக்கிறார்கள்.

அத்துடன் அந்த மர்ம நபர்கள் அந்த சிறுமியையும், அவருடைய காதலனையும் அந்த காணொளியை காட்டி மிரட்டி இருக்கிறார்கள். இந்த காணொளியை இணையத்தில் வெளியிட்டு விடுவோம் என்று தெரிவித்து அந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியுள்ளனர். அதோடு அந்த சிறுமி அணிந்திருந்த 30,000 ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளையும் அந்த மர்ம நபர்கள் பறித்துச் சென்றிருக்கிறார்கள்.

இந்த சம்பவத்திற்கு பிறகு தொடர்ச்சியாக அந்த மர்ம நபர்கள் இந்த காணொளியை வைத்து அந்த சிறுமியிடம் அடிக்கடி பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பயந்து போன அந்த சிறுமி, பெற்றோருக்கு தெரியாமல் வீட்டிலிருந்து பணத்தை எடுத்து வந்து அந்த நபர்களிடம் கொடுத்து இருக்கிறார். நாட்கள் செல்ல, செல்ல, அவர்களின் தொந்தரவு எல்லை மீறி சென்றது. அதோடு, காதலனின் நடவடிக்கைகளிலும் அந்த சிறுமிக்கு சந்தேகம் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்த சிறுமிக்கு நடந்த கொடுமையை தன்னுடைய பெற்றோரிடம் தெரிவித்து அவர் வருத்தப்பட்டு இருக்கிறார். இதனால் அதிர்ச்சிக்குள்ளான அந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்கள். இந்த புகாரின் அடிப்படையில் சிறுமியை மிரட்டிய நபர்களான மேலவளைவு பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (27), உத்தங்குடியைச் சேர்ந்த வினோத்குமார் (19) உள்ளிட்ட இருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.

காவல்துறையினரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. அதாவது சிறுமியின் காதலனான சிவராமன் வகுத்துக் கொடுத்த திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த மிரட்டல் நாடகம் நடந்துள்ளது என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த சிறுமியின் காதலன் சிவராமன் உட்பட 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

Next Post

குடிபோதையில் ஏற்பட்ட தகராறு...! சொந்த அண்ணனையே லாரி ஏற்றி கொலை செய்த தம்பி...!

Wed Jan 11 , 2023
ஒரு மனிதனின் மிகப்பெரிய எதிரி அவருடைய கோபம் தான் மனிதன் தன்னுடைய கோபத்தை கட்டுப்படுத்த தெரிந்து கொண்டால் எந்த ஒரு சூழ்நிலையையும் சமாளித்து விடலாம். அப்படி கோபத்தை கட்டுப்படுத்த தெரியாத நபராக இருந்தால், அந்த கோபம் ஒரு மனிதனை மிகப்பெரிய இன்னலுக்கு ஆளாக்கிவிடும். அப்படி ஒரு சம்பவம் தான் திருவள்ளூர் மாவட்டம் புழல் பகுதியில் நடைபெற்றுள்ளது. அதாவது, புழல் பகுதி அம்பத்தூர் சாலையில் சென்ற மாதம் 21ஆம் தேதி ஒரு […]

You May Like