fbpx

தந்தையை மண்வெட்டி காம்பால் அடித்துக் கொன்ற கொடூரம்; தலைமறைவான மகன்.. போலீசார் வலைவீச்சு…!

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அருகேயுள்ள தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் ரவி (58). அவரது மகன் குமரேசனுக்கு திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆனது. இந்நிலையில் இவர்களுக்கு மாடி வீடு மற்றும் ஒரு குடிசை வீடு உள்ளது. குமரேசன் மனைவி்க்கும், மாமியார், மாமனார், மருமகளுக்கு  இடையே  அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.  

கடந்த ஐந்து வருடங்களாக சிங்கப்பூரில் வேலை பார்த்து  வந்த  குமரேசன் இப்போது தனது சொந்த ஊரில் தினமும் வேலைக்கு சென்று வீட்டுக்கு திரும்பும் போது குமரேசனின் மனைவி, மாமியார், மாமனாருடன் தகராறில் ஈடுபட்டதாக தெரிகிறது. குமரேசன் தந்தை ரவி, மாடி வீட்டில் ஒரு அறை கொடுத்தால் அவரும் மனைவியும் தங்கி கொள்வதாக மருமகளிடம்  வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு முற்றவே குமரேசன் அருகில் இருந்த மண்வெட்டி  கட்டையை  எடுத்து தந்தை ரவியை சரமாரியாக அடித்துள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த ரவி இரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். உடனே குமரேசன், தனது மனைவியுடன் தப்பியோடி விட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பரவாக்கோட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் குமரேசனை தேடி வருகின்றனர். பெற்ற தந்தையை மகன் அடித்து படுகொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Baskar

Next Post

TRB: மொத்தம் 3,236 பணியிடங்களுக்கு....! ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு...!

Mon Aug 29 , 2022
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 3,236 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கான பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள் ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட தமிழ் வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களின் அடிப்படையில் அவர்களின் விபரங்கள் சரிபார்க்கப்பட்டு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது போல் 17 பாடங்களுக்கு ஒரு பணியிடத்திற்கு […]

You May Like