தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு பண்டிகை தினங்களில் பொதுமக்களின் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதிலும் குறிப்பாக சித்திரை மாதம் பிறந்து விட்டால் பல கோவில்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படும் என்பதால் திருவிழாவை பார்ப்பதற்கு பொதுமக்களின் வசதிக்காக உள்ளூர் விடுமுறை வழங்கப்படுவது உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஸ்ரீ கங்கையம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வரும் 15ஆம் தேதி விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாகவும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வரும் ஜூன் மாதம் 24 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கூறியுள்ளார்.