தமிழ்நாடு முழுவதும் தற்போது கடத்தல் கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர்.
அந்த வகையில் மதுரையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் கார்த்திகை செல்வம் என்பதற்கு இரண்டு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். அவர்கள் கடந்த 2017 ஆம் வருடம் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி திடீரென்று காணாமல் போயினர்.
இது தொடர்பாக காவல்துறையில் புகார் வழங்கப்பட்டது இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர்.
அந்த விசாரணையில் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ஆம் தேதி பள்ளி முடிந்து இரு மாணவிகளையும் ஓட்டுநர் பாண்டி என்பவர் அழைத்து வந்திருக்கிறார் அப்போது காவல்துறையினர் போல வேடமடைந்து வந்த ஒரு கும்பல் அந்தக் காரை வழிமறித்து வாகனத்தின் ஆவணங்களை கேட்டு சரி பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதன் பிறகு ஆவணங்களில் குளறுபடி இருப்பதாகவும் தங்களை பின்தொடர வேண்டும் என்று அழைத்துச் சென்று கருப்பா ஊரணி அருகே ஓட்டுநர் பாண்டியை தாக்கி விட்டு அவருக்கு மயக்க மருந்தை ஊசியின் மூலமாக செலுத்தி விட்டு இரு பள்ளி மாணவிகளையும் அந்த மர்ம கும்பல் கடத்திச் சென்று விட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக கார் ஓட்டுநர் பாண்டி வழங்கிய தகவலின் அடிப்படையில் அந்த சிறுமிகளின் பெற்றோர் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர்.
அதன்படி காவல் துறையினர் சினிமா பணியில் விசாரணை நடத்தினர் அதாவது சிறுமியை கடத்திச் சென்றவர்களை சினிமாவில் வருவதைப் போல மாணவிகளின் தந்தையிடம் பேசும் ஆடியோவை பதிவு செய்து அவர்களுடைய கைபேசி எண்ணை வைத்து அவர்களுடைய இருப்பிடங்களை காவல்துறையினர் பின் தொடர்ந்து சென்றனர்.
இந்த நிலையில் தான் கடத்தல் காரர்களும் குழந்தைகளை ஒப்படைப்பதற்காக ஒரு கோடி ரூபாய் பணம் வேண்டும் என்று கேட்டு மிரட்டி இருக்கிறார்கள். அதன் பிறகு சற்று நேரம் சென்ற பிறகு 50 லட்சம் ரூபாய் வேண்டும் என்று அந்த கும்பல் கேட்டு இருக்கிறது. மேலும் அதனை ஒரு இடத்தில் ஒப்படைக்க வேண்டும் என்றும் அந்த கும்பல் தெரிவித்திருந்தது.
கடத்தல் கும்பலின் கோரிக்கையை ஏற்று 50 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. அதன் பிறகு குழந்தைகளை அவர்களுடைய வீட்டின் அருகிலேயே நள்ளிரவில் இறக்கிவிட்டு சென்று விட்டனர். கடத்தல் காரர்களை நெருங்கி சென்று இருந்தும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த கும்பலை காவல்துறையினர் கைது செய்யாமல் விட்டு விட்டனர்.
இது தொடர்பான புகாரின் அடிப்படையில் தெப்பக்குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த ரவீந்திரனன், கண்ணன், மணிகண்டன், மணிராஜ், வைரமுத்து, குணசேகரன், ராதாகிருஷ்ணன், கலாதேவி, ஜீவிதா சின்னதுரை உள்ளிட்ட 10 பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்