விழுப்புரம் மாவட்டம் கடந்த 13ஆம் தேதி மாலை கள்ளச்சாராயம் குடித்து 70க்ஜ்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். எல்லோருக்கும் வாந்தி, மயக்கம், கண் எரிச்சல் உள்ளிட்டவை ஏற்பட்டதன் காரணமாக, விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள மாவட்ட தலைமையின் மருத்துவமனையிலும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் 13 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து வழக்க பதிவு செய்த மரக்காணம் காவல் துறையினர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டவர்கள் மெத்தனால் விற்பனை செய்தவர்கள் என்று 11 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்களில் ஏழு பேர் குணமடைந்து வீடு திரும்ப நிலையில் 58 வயதான கன்னியப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இதன் காரணமாக, விழுப்புரத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலியான உடைந்து எண்ணிக்கை 14 ஆக அதிகரித்து இருக்கிறது. சிகிச்சை பெற்று வரும் 42 பேரில், 15 பேருக்கு கண், சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது. இத்தகைய நிலையில், விஷச்சாராயம் குடித்து சிகிச்சை பெற்று வந்த 22 பேர் குணமடைந்து வீடு திரும்பி இருக்கிறார்கள்.