fbpx

வீட்டிலுள்ள பெண்களை தகாத வார்த்தையில் பேசிய தந்தை.. ஆத்திரத்தில் கழுத்தை அறுத்த மகன்..!

சென்னை அமைந்தகரை செனாய் நகர் பாரதிபுரம் பகுதியில் வசிப்பவர் சாகுல்அமீது (57). இவர் தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். இவரது மகன் சதாம் உசேன். மனைவியையும், மருமகளையும் தினமும் சாகுல் அமீது அசிங்கமான வார்த்தைகளால் பேசி வந்துள்ளார். அவரை குடும்பத்தினர் கண்டித்தும் சாகுல்அமீது திருந்தவில்லை என தெரிகிறது. வழக்கம் போல் நேற்றும் மனைவியையும், மருமகளையும் ஆபாசமாக பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சதாம்உசேன், தந்தையை தட்டிக்கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதால் தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார். பிறகு வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து தந்தையின் கழுத்தை அறுத்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய், அப்பாவை விட்டுவிடு என கதறி அழுதுள்ளார். ஆனால் எதையும் காதில் வாங்காத சதாம் உசேன் தந்தையின் கழுத்தை அறுத்துக் கொண்டிருந்ததால் சாகுல் அமீது மனைவி வெளியே ஓடிவந்து பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார். இதை தொடர்ந்து ஆட்கள் வந்ததால் சதாம்உசேன் தப்பித்தார்.

அதன்பிறகு சாகுல்அமீதை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அமைந்தகரை காவல்துறையினர் சென்று விசாரணை நடத்தி சதாம் உசேனை தேடி வந்தனர். இந்நிலையில், தந்தையின் கழுத்தை அறுத்த கத்தியுடன் அமைந்தகரை காவல் நிலையத்தில் சதாம் உசேன் சரணடைந்தார். அவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது சதாம் உசேன் கூறுகையில், என் தந்தை தள்ளுவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். நான் கார் டிரைவராக உள்ளேன். என் தந்தை பத்தாயிரம் கடன் வாங்கி அந்த பணத்தில் குடித்துவிட்டு வந்து தாய் மற்றும் என் மனைவியை அசிங்கமாக பேசினார். நான் பலமுறை கண்டித்தும் அவர் திருந்தவில்லை. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் தந்தையின் கழுத்தை அறுத்துவிட்டேன் என்றார். இதை தொடர்ந்து கொலை முயற்சி வழக்குபதிவு செய்து, சதாம் உசேனை கைது செய்து எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Rupa

Next Post

மென்பொருள் நிறுவனங்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை.... மழையால் ரூ.225 கோடி நஷ்டம் ஏற்பட்டது குறித்து விரைவில் முடிவு -பசவராஜ்பொம்மை

Mon Sep 5 , 2022
பெங்களூருவில் பெய்த கனமழையால் ரூ.225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐ.டி.நிறுவனங்கள் புகார் அளித்ததை தொடர்ந்து கர்நாடக முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். பெங்களூருவில் கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் நகரின் பல்வேறு இடங்கள் வெள்ளக்காடானது. முக்கியமாக ஐ.டி.நிறுவனங்கள் உள்ள ஒயிட்பீல்டு , எலக்ட்ரானிக் சிட்டி , மடிவாலா பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்ததால் கட்டிடங்களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் 5 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதோடு […]

You May Like