fbpx

மருமகனை கழுத்தை நெரித்து கொலை செய்து, பெட்ரோல் ஊற்றி எரித்த மாமனார்..!

ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம், போடலகொண்டபள்ளியைச் சேர்ந்தவர் நாராயண ரெட்டி (26), சாப்ட்வேர் கம்பெனியில், சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்து வருகிறார். இவரும் அதே ஊரைச் சேர்ந்த கந்துலா வெங்கடேஸ்வர ரெட்டியின் மகள் ரவாளியும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு ரவாளியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். பிறகு ஊர் திரும்பியதும். ரவாளியை அவரது பெற்றோர் வலுக்கட்டாயமாக நாராயண ரெட்டியிடம் இருந்து பிரித்து அழைத்துச் சென்று விட்டனர்.

நாராயண ரெட்டி தனது மனைவியை ஒப்படைக்குமாறு ரவாளியின் பெற்றோருக்கு எதிராக ஹேர்பியஸ் மனு தாக்கல் செய்தார். ஆனால் ரவாளியின் கருத்தைக் கேட்ட நீதிமன்றம், அவர் பெற்றோருடன் இருக்க உத்தரவிட்டது. ரவாளியின் பெற்றோர் அவருக்கு வேறு ஒரு திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் ரவாளி இதற்கு சம்மதிக்கவில்லை. இந்நிலையில் ரவாளி நாராயண ரெட்டியுடன் அடிக்கடி போனில் பேசி வந்துள்ளார். இதனால் கோபம் அடைந்த ரவாளியின் தந்தை வெங்கடேஸ்வர ரெட்டி, நாராயண ரெட்டியை கொலை செய்ய முடிவு எடுத்தார். இதற்காக அவரது உறவினரான சீனிவாச ரெட்டியிடம் ஆலோசனை கேட்டார். இதை தொடர்ந்து சீனிவாச ரெட்டி தனது கூட்டாலிகள் காசி மற்றும் ஆஷிக் ஆகியோருடன் நாராயண ரெட்டியை காரில் கடத்தினார். கஜாகுடாவில் இருந்து ஜின்னாரம் செல்லும் வழியில் நாராயண ரெட்டி கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலை ஜின்னாரில் உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொளுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.

வெளியே சென்ற நாராயண ரெட்டி வீடு திரும்பாததால், அவரது குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். நாராயண ரெட்டியின் செல்போனை ஆய்வு செய்து ஆசிப்பை கைது செய்தனர். அவரை விசாரித்ததில், நாராயண ரெட்டி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. ஆசிப் கொடுத்த தகவலின் பேரில், ஜின்னாரம் மண்டலம் நல்லுரு கிராமத்தின் புறநகர் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் சடலத்தை காவல்துறையினர் கைப்பற்றினர். புகாரின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட வெங்கடேஸ்வர ரெட்டி மற்றும் ஸ்ரீனிவாஸ் ரெட்டி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Baskar

Next Post

குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக் கூடாதா? உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!

Mon Jul 4 , 2022
கோயில் குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக்கூடாது என இந்து சமய அறநிலையத்துறை விதிகள் எதுவும் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பிரம்மபுரத்தை சேர்ந்த சோமன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கோயில்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த கோயில்களின் குடமுழுக்கு விழாக்களில் ஏராளமான சம்பிரதாயங்கள் கடைபிடிக்கப்பட்டுள்ளன. தற்போதும் […]
குடமுழுக்கு விழாவில் இந்துக்கள் அல்லாதோர் பங்கேற்கக் கூடாதா? உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு..!

You May Like