fbpx

குழந்தையின் கழுத்தை நெறித்துக் கொன்ற தந்தை; தூக்கத்தை கெடுத்ததால் நடந்த கொடூரம்..!

அரியானா மாநிலத்தில் பரிதாபாத் பகுதியில் வசிக்கும் ஒருவர் இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரின் மனைவி அருகில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு ரக்ஷா பந்தன் விழாவை கொண்டாட சென்றுள்ளார். அவர் தனது ஒன்றரை வயது மகனை வீட்டில் தூங்க வைத்து விட்டு சென்றுள்ளார். பாதி தூக்கத்தில் எழுந்த குழந்தை அம்மாவை காணாமல் அழுதுள்ளது. இதனால் தூங்கிக் கொண்டிருந்த அந்த குழந்தையின் தந்தை குழந்தையின் அழுகை சத்தத்தால்  தூக்கம் கலைந்து எழுந்துள்ளார். மகனின் அழுகையை அடக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் அம்மாவை காணவில்லை என்று தொடர்ந்து குழந்தை அழுதுள்ளது.  

இதனால் ஆத்திரமடைந்த  அந்த குழந்தையின் தந்தை, தூங்குவதற்கு தொந்தரவாக உள்ளது என்ற ஆத்திரத்தில் குழந்தையின் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் குழந்தை உயிருக்கு போராடி உள்ளது. அதை பொருட்படுத்தாமல் கழுத்தை அழுத்தமாக ஆவேசமாக நெரித்ததில் குழந்தை துடிதுடித்து இறந்துள்ளது. உயிருக்கு போராடிய போது அதிகமாக சத்தம் போட்டுள்ளது அந்த குழந்தை. திடீரென்று சத்தம் நின்றதால் அக்கம் பக்கத்து வீட்டில் உள்ளவர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. இவ்வளவு சத்தமாக அழுத குழந்தை திடீரென்று எப்படி அழுகையை நிறுத்தியது என்று சந்தேகத்தில் அவர்கள் ஓடி வந்து பார்த்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். குழந்தை மூக்கிலும் வாயிலும் ரத்தம் வடிந்த நிலையில் சடலமாக கிடந்தது.

அவர்களையெல்லாம் பார்த்ததும் அந்த குழந்தையின் தந்தை அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.  தாய் வீட்டிற்கு சென்ற குழந்தையின் தாய் வீடு திரும்பியுள்ளார் அங்கு தன் மகனின் நிலையை பார்த்து கதறி அழுதார். தூங்க வைத்துவிட்டு தானே சென்றேன். அதற்குள் இப்படி ஆகிவிட்டதே என்று சொல்லி கதறியுள்ளார். சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி மருத்துவ மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் தப்பி ஓடிய குழந்தையின் தந்தையை தேடி வருகின்றனர்.

Rupa

Next Post

கர்ப்பிணி பெண் தூக்கு போட்டு தற்கொலை.. காவல்துறையினர் விசாரணை..!

Sun Aug 14 , 2022
ராமநாதபுரம் மாவட்டம் பட்டினம்காத்தான் பகுதியில் வசித்து வருபவர் சிவகுமார். கூலி வேலை பார்த்து வருகிறார். இவருக்கு எட்டு மாதங்களுக்கு முன்பு பஞ்ச வர்ணம்என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. பஞ்சவர்ணம் தற்போது கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில், சிவகுமாருக்கும், பஞ்ச வர்ணத்துக்கும், அடிக்கடி குடும்ப தகராறு நடந்து வந்துள்ளது. இதில் பஞ்சவர்ணம் மன உளைச்சலில் இருந்துள்ளார். இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த பஞ்சவர்ணத்தின் […]

You May Like