fbpx

அதிகாலையில் வீடு புகுந்து பெண் வெட்டிக்கொலை…! காரணம் என்ன….?

தமிழகத்தில் சமீப காலமாக கொலை, கொள்ளை, கற்பழிப்பு உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரிக்க தொடங்கி விட்டனர்.

இது போன்ற சமூக விரோத செயல்கள் சமீப காலமாக அதிகரித்து வருவதால் எதிர்க்கட்சியினர் ஆளுங்கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

ஆனாலும் இது போன்ற சம்பவங்களை தடுப்பதற்காக ஆளும் தரப்பும், காவல்துறையும் பல கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இருந்தாலும் இது போன்ற சமூக விரோத செயல்கள் இதுவரையில் குறைந்தபாடில்லை.

அந்த வகையில், சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே இருக்கின்ற கண்ணங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் குமார், இவருடைய மனைவி வேல்மதி (35) இந்த நிலையில் குமார் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். ஆகவே வேலுமதி தன்னுடைய மகன் மற்றும் தன்னுடைய தாயாருடன் ஒரே வீட்டில் வசித்து வருகிறார்.

வேல்மதி அவருடைய மகன் மூவரசன் மற்றும் தாயார் கனகம் உள்ளிட்டோருடன் வசித்து வந்த வேல்மதியின் வீட்டினுள் நேற்று அதிகாலை ஒரு பயங்கர சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதாவது நேற்று அதிகாலை வேல்மதியின் வீட்டிற்குள் புகுந்த சில மர்ம நபர்கள் வேல்மதியை அறிவாளால் சரமாரியாக வெட்டி இருக்கிறார்கள்.

இதனை தடுக்க முயற்சி செய்த அவருடைய தாய் கனகம் மற்றும் மகன் மூவரசன் உள்ளிட்டோரையும் சரமாரியாக விட்டுவிட்டு பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளை அந்த மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றனர்.

இந்த நிலையில், நேற்று காலை வெகு நேரம் ஆன பிறகு கூட கனகாவின் வீடு திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகம் அடைந்த அண்டை வீட்டினர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் மூவரும் கிடப்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாயினர்.

அதோடு உடனடியாக இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

அந்த தகவலினடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கனகம் மற்றும் அவருடைய பேரன் மூவரசன் உள்ளிட்ட வரை தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவத்தில் உயிரிழந்த வேல்மதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

இந்த கொடூர செயலை செய்துவிட்டு தப்பிச் சென்ற கொலையாளிகள் அந்த வீட்டை சுற்றி மிளகாய் பொடியை தூவி விட்டு சென்றிருப்பதும் தெரியவந்தது. இந்த கொள்ளை சம்பவத்திற்காக மட்டும்தான் இந்த கொலை நடைபெற்றதா? அல்லது வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா? என்ற பாணியில் காவல்துறையினர் தங்களுடைய விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த நபரின் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

Next Post

கந்துவட்டி கொடுமையால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி….! தனியார் ஒப்பந்ததாரர் எடுத்த விபரீத முடிவு….!

Thu Jan 12 , 2023
நாட்டில் கந்துவட்டிக் கொடுமை அதிகரித்திருக்கிறது. இந்த கந்துவட்டியால் பல குடும்பங்கள் நடுத்தெருவிற்கு வந்திருக்கின்றனர். மேலும் பல குடும்பங்கள் என்ன ஆனது என்று தெரியாத அளவிற்கு காணாமல் போய் இருக்கிறது. மேலும் பல குடும்பங்கள் இந்த கந்து வட்டி கொடுமைக்கு பயந்து குடும்பத்துடன் தற்கொலை செய்து இருக்கிறார்கள். அப்படி ஒரு சம்பவம் தான் மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியில் நடைபெற்றுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் கோபால எடுத்துள்ள பைரகர் காலன் […]

You May Like