நாட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வந்ததை தொடர்ந்து அது போன்ற கொடூர குற்றங்களை ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு அது அமலுக்கு வந்தது.
ஆனாலும் கூட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இதுவரையிலும் குறைந்தபாடில்லை.
இது போன்ற தகாத செயல்களில் சமூக விரோதிகளும், ரவுடிகளும் ஈடுபடுவது சகஜமான விஷயம் தான் என்றாலும் கூட ஒரு மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதிகளே இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவது வருத்தமளிக்கும் செய்தியாக இருக்கிறது.
கடந்த 2021 ஆம் வருடம் பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த முன்னாள் சட்டசபை உறுப்பினர், டெல்லியை சேர்ந்த ஒரு ஐஏஎஸ் அதிகாரி உள்ளிட்டோர் ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்கள் இந்த கொடூர சம்பவம் துப்பாக்கி முனையில் நடைபெற்று உள்ளது.
அதாவது, பீகார் மாநிலம் பாட்னாவை சார்ந்த இளம் பெண் ஒருவர் தன்னை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் என்று பாட்னா ஐஏஎஸ் அலுவலர் சஞ்சீவ் ஹேண்ஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியை சேர்ந்த முன்னாள் ஜான் ஜர்பூர் சட்டசபை உறுப்பினர் குலாப் யாதவ் உள்ளிட்ட இருவர் மீதும் பாட்னா காவல்துறையில் புகார் வழங்கினார்.
ஆனாலும் இந்த புகாரின் மீது காவல்துறையினர் எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாட்னா சிவில் நீதிமன்றத்தில் அந்தப் பெண்மணி முறையீடு செய்திருக்கிறார். ஆனாலும் அந்த நீதிமன்றத்திலும் அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைக்கவில்லை. ஆனாலும் மனம் தளராத அந்த பெண்மணி, பிஹார் உயர் நீதிமன்றத்தில் இது குறித்து முறையிட்டுள்ளார். அவருடைய வழக்கை ஏற்றுக் கொண்ட பீகார் உயர்நீதிமன்றம், குற்றம் சுமத்தப்பட்ட ஐஏஎஸ் அலுவலர் மற்றும் முன்னாள் சட்டசபை உறுப்பினர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பரிந்துரை செய்தது.
இதனைத் தொடர்ந்து, உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில், குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது பாட்னா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று பாட்னா சிவில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதனை தொடர்ந்து அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்திய, ஐஏஎஸ் அலுவலர் மற்றும் முன்னாள் சட்டசபை உறுப்பினர் உள்ளிட்டோர் மீது பாட்னா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள்.