தலைநகர் சென்னையில் குடும்ப வறுமையின் காரணமாக, வேலை தேடி வருகை தரும் தமிழகத்தில் பல பகுதிகளை சேர்ந்த இளம் பெண்களை ஏமாற்றி பாலியல் தொழில் ஈடுபடுத்துவது தொடர் கதையாக இருந்து வருகிறது. அதேபோல ஸ்பா என்ற பெயரில் விபச்சாரம் செய்து வருகிறார்கள். இதனை தடுக்கும் விதமாக விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினர் தலைநகர் சென்னையில் அப்போது சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இத்தகைய நிலையில், சென்னை விருகம்பாக்கம் ஆற்காடு சாலையில் இருக்கின்ற ஏரோ பியூட்டி சலூன் அண்ட் ஸ்பா சென்டரில் இரவு சமயங்களில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் வந்து செல்வதாக காவல்துறையினருக்கு ரகசிய புகார் வந்தது. ஆகவே அந்த பகுதியை காவல் துறையினர் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்கே பாலியல் தொழில் நடத்தப்படுவது உறுதி செய்யப்பட்டது.
ஆகவே அந்த சென்டரில் காவல்துறையினர் திடீரென்று அதிரடி சோதனையில் இறங்கினர். அப்போது இளம் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்து வந்த சாரதா (39) என்ற பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர்.
அந்த பெண்ணிடமிருந்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்த கைபேசிகளையும் பறிமுதல் செய்தனர் காவல்துறையை சார்ந்தவர்கள். அதோடு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வந்த 2 பெண்களையும் காவல்துறையினர் அரசு மகளிர் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.