ராமநகர் மாவட்டம் மாகடி தாலுகா சோலூரில் குத்தகே மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தின் சாமியாராக இருந்து வருபவர் சிவமகந்தே சுவாமி என்கிற ஹரீஷ் சுவாமி. இந்நிலையில், மடத்தில் இருந்த சாமியார் திடீரென்று மாயமானார்.
ஹரீஷ் சுவாமி, ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அந்த பெண்ணுடன் சாமியார் மடத்தில் இருந்து ஓடி இருக்கிறார் என்று கூறுகின்றனர். இது குறித்து சாமியார் எழுதி வைத்திருந்த கடிதம் மடத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அந்த கடிதத்தில் சாமியாராக என்னால் வாழ முடியவல்லை. நிம்மதி இல்லாமல் இருந்தேன். அதனால் மடத்தின் வாழ்க்கையில் இருந்து விடுபடுகிறேன். என்னை யாரும் தேடாதீர்கள். எங்கோ சென்று நிம்மதியாக வாழ இருக்கிறேன் என்று அவர் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார்.
சாமியார் இதற்கு முன்பும்இதே போல் மடத்தில் இருந்து ஓடியதாக கூறுகின்றனர். தற்போது சாமியாரும் ஒரு பெண்ணும் காதலித்து வந்ததாகவும், அவருடன் சேர்ந்து திருமண வாழ்க்கை வாழ மடத்தில் இருந்து ஓடி விட்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த சம்பவம் மாகடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.