ஏப்ரல் மாதம் ஆரம்பத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து சரிந்து கொண்டே வந்த நிலையில், தற்போது 45 ஆயிரத்தை கடந்து விற்பனையாகி வருகிறது. நேற்று சவரன் ஒன்றுக்கு 320 ரூபாய் வரையில் குறைந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் அதிரடியாக குறைந்து இருக்கிறது.
22 கேரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு 10 ரூபாய் குறைந்து 5640 ஆகவும், சவரன் ஒன்றுக்கு 80 ரூபாய் குறைந்து 45,120 ரூபாய் ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
18 கேரட் ஆபரணத் தங்கம் கிராமம் ஒன்றுக்கு 8 ரூபாய் குறைந்து 4620ரூபாயாகவும் சவரன் ஒன்றுக்கு 64 ரூபாய் குறைந்து 36,960 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் வெள்ளியின் விலை ஒரு கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து 80.20 ரூபாயாகவும், 1 கிலோ வெள்ளி 80,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது