fbpx

மக்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்றுவதே ‘திராவிட மாடல்’ அரசின் முதன்மை பணி: மு.க.ஸ்டாலின்.!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் பல்வேறு பணிகளை தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி நெல்லையில் இன்று நடைபெறும் அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அவ்விழாவில் பல்வேறு பணிகளை திறந்து வைத்தார். புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். பல்வேறு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். அதன் பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது;-

கலை, இலக்கியம், வரலாறு, வீரம், ஆன்மிகம் என அனைத்திற்கும் பெயர் பெற்றது நெல்லை மாவட்டம் என்று நெல்லையை புகழ்ந்தார். அதிக கல்வி நிறுவனங்கள் முதன்முதலில் உருவானது நெல்லையில்தான் என முதலமைச்சர் கூறினார். நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையில் சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில், மக்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த மணிமுத்தாறு அணை அருகில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பல்லுயிர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்படும் என்று கூறினார்.

மேலும், வாழை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, களக்காட்டில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த வாழை ஏல மையம் அமைக்கப்படும் என்றும், நெல்லை மாவட்டத்தின் கடற்கரையோரப் பகுதிகளில், விளையாட்டு வீரர்கள் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர்,‌ இவர்களை ஊக்குவிக்கும் வகையில், ராதாபுரத்தில் விளையாட்டரங்கம் மற்றும் பயிற்சி மையம் அமைக்கப்படும் என்று கூறினார்.

மேலும் நெல்லை மக்களின் நீண்டகால கோரிக்கையான நெல்லை மாநகர மேற்கு புறவழிச்சாலை அமைப்பதற்கான நில எடுப்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிவடைந்த பிறகு, மேற்கு புறவழிச்சாலை 370 கோடி மதிப்பீட்டில், மூன்று கட்டங்களாக அமைக்கப்படும் என்று தொரிவித்தார்.

தமிழகத்தில் முதன்முறையாக நெல்லை மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் முழு உடல்நல ஆலோசனை மற்றும் சிகிச்சை பராமரிப்புகளுக்காக டிஜிட்டல் பதிவேடு பராமரிக்கப்பட்டு, கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களது முழு உடல் பரிசோதனை விவரங்கள் டிஜிட்டல் முறையில் பராமரிக்கப்படும். கர்ப்பிணி பெண்கள் உயிரிழப்புகளைத் தடுப்பதுதான் இந்த திட்டத்தின் நோக்கம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Baskar

Next Post

தான் வளர்த்த கோழியை கடித்த நாயின் உரிமையாளரை… சரமாரியாக கத்தியால் குத்தி கொன்ற வாலிபர் கைது..!

Thu Sep 8 , 2022
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காமராஜர் நகரில் வசித்து வருபவர் விஜயன். இவரது மகன் விஷ்ணு (26). இவர் ஒரு நாய் வளர்த்து வந்தார். அதே பகுதியில் வசிக்கும் முத்தனின் (38) கோழியை விஷ்ணுவின் நாய் கடித்துள்ளது. எனவே இந்த சம்பவம் தொடர்பாக இன்று காலை இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முத்து என் கோழியை உன் நாய்தான் கடித்தது என்று கூறி தான் மறைத்து வைத்திருந்த […]

You May Like