fbpx

பெண் அதிகாரியை பரபரவென இழுத்துச் சென்று கற்கலால் தாக்கிய மணல் மாஃபியா கும்பல்….! பிகார் மாநிலத்தில் பரபரப்பு….!

பீகார் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டவிரோதமாக மணல் கடத்தும் மாஃபியா கும்பல் செயல்பட்டு வருகிறது. இது போன்ற சம்பவங்கள் பீகார் மாநிலத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது அதன் அடிப்படையில் அந்த மாநில தலைநகர் பாட்னா அருகே உள்ள தகுதிகளில் பல மாபியா கும்பல்கள் மணல் கடத்தலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது தொடர்பாக வெளியாகும் புகார்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக பாட்னா அருகே இருக்கின்ற பிஹ்தா என்ற பகுதியில் சுரங்கத் துறையைச் சார்ந்த பெண் அதிகாரி ஒருவர் ஆய்வு செய்வதற்காக சென்றார். அவருடன் 2 ஆய்வாளர்களும் சென்றுள்ளனர். அந்த சமயத்தில் அங்கே லாரி லாரியாக மணல் மாஃபியா கும்பல் மணலை கடத்திச் சென்றது. அதிகாரி வந்ததை கவனித்த அந்த மாஃபியாகும்பல் சற்றும் பயம் கொள்ளாமல் அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது அந்த கும்பல் அந்தப் பெண் அதிகாரியை தரதரவென்று இழுத்துச் சென்று கற்களால் தாக்கி இருக்கிறது.

இந்த கொடூர தாக்குதல் சம்பவத்தை அங்கிருந்த ஒரு நபர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார் இணையதளத்தில் வயர்களாக பரவிய இந்த வீடியோ பலரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. ஆகவே இந்த சம்பவம் குறித்து காவல்துறை இதுவரையில் 44 பேர் மீது கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அதோடு மணல் கடத்தல் கூட்டத்தில் ஈடுபட்ட எல்லோரையும் கைது செய்யும் நடவடிக்கைகளையும் காவல்துறை தீவிரப்படுத்தி இருக்கிறது என்று பாட்னா காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் குமார் கூறியுள்ளார். வீடியோ ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்கள் எல்லோரும் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 50க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறை பறிமுதல் செய்துள்ளது தாக்குதலில் பெண் அதிகாரி உட்பட மூவர் காயம் அடைந்து இருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை மேற்கொள்வதற்கு பிகரு மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Next Post

தமிழக அரசு உடனடியாக இந்த மசோதாவை திரும்ப பெற வேண்டும்……! தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்……!

Wed Apr 19 , 2023
தமிழகத்தில் முத்திரைத்தாள் விலையை 10 மடங்கு அதிகரித்து விற்பனை செய்ய ஏற்றவாறு சட்டசபையில் ஒரு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த சட்ட மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என்று தமிழக பாஜகவின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி இருக்கிறார். இதுகுறித்து வெளியிட்டு இருக்கின்ற அறிக்கையில், குடிநீர் வரி பால் விலை மின்கட்டணம் சொத்து வரி போன்றவற்றின் உயர்வை அடுத்து முத்திரைத்தாள் கட்டணமும் அதிகரித்து இருப்பதாக சுமத்தி இருக்கிறார். தமிழகத்தில் அரசு […]

You May Like