fbpx

10ம் வகுப்பு பொது தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் எடுத்த விபரீத முடிவு…..! காரைக்கால் அருகே சோகம்…..!

தமிழ்நாடு முழுவதும் இன்று காலை 10 மணி அளவில் 10 ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த நிலையில், காரைக்கால் பகுதியில் 10ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதாவது, காரைக்கால் பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் பத்தாம் வகுப்பு படித்து வந்த மாணவர்தான் ராகவன். இன்று காலை 10ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட நிலையில் அவர் பொது தேர்வில் தோல்வியடைந்திருக்கிறார். இதன் காரணமாக, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், தேர்வில் தோல்வியடைவதற்கு தற்கொலை எப்போதும் தீர்வாகாது. மாணவர்கள் முடியாது என்று நினைப்பது தவறு. ஆகவே இது போன்ற தவறான முடிவுகளை எடுக்க வேண்டாம். இந்த முறை தோல்வியுற்றால் நிச்சயம் அடுத்த முறை வெற்றி பெறலாம். என்ற நம்பிக்கையுடன் இருங்கள், இது போன்ற முடிவு யாரும் எடுக்க வேண்டாம் என்று தமிழக அரசு மாணவர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறது.

Next Post

வீடு கட்டுபவர்கள் கடன் வாங்கும் எண்ணத்தில் உள்ளீர்களா..? அப்படினா கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க..!!

Fri May 19 , 2023
நம்மில் பலர் வீடு கட்டவோ அல்லது வாங்கவோ வீட்டுக் கடன் வாங்கி இருப்போம். அதை விரைவாக கட்டி முடிக்க நாம் முயற்சித்தாலும், கடனின் காலம் மற்றும் வட்டி காரணமாக நாம் நீண்ட காலமாக வீட்டுக்கடனுக்கு இ.எம்.ஐ. செலுத்திக் கொண்டிருப்போம். இந்நிலையில், பெரும்பாலான வங்கிகள் மற்றும் NBFC-கள் முன்பணம் செலுத்தும் வசதியை வழங்குகின்றன. வீட்டுக் கடன் என்பது நீண்ட காலக் கடன் என்பதால் வங்கிகள் மற்றும் சில நிதியுதவி நிறுவனங்களுக்கு அதில் […]

You May Like