fbpx

இரண்டாவது திருமணம் செய்து வாட்ஸ்அப்பில் போட்டோ அனுப்பிய மனைவி… கதறி தவிக்கும் கணவர்..!

வடமதுரை அருகே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக மனைவி அனுப்பிய புகைப்படத்தால், அதிர்ச்சியடைந்த முதல் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அருகில் உள்ள ஏட்டிககுளத்துபட்டியில் வசிப்பவர் ஆனந்த் (30). தனியார் சோலார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் பாடியவரை சேர்ந்த வீரழகு (25) என்பவருக்கும் கடந்த மூன்று வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இவர் மனைவி தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவர்களுக்கு குழந்தை இல்லாததால் தம்பதியினரிடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதனால் தனது பெற்றோர் வீட்டிற்கு சென்ற வீரழகு அங்கிருந்து வேலைக்கு சென்று வந்தார்.  இந்த சூழ்நிலையில் ஆனந்த் வாட்ஸ் அப்பிற்கு அவரது மனைவி ஒரு புகைப்படம் அனுப்பியுள்ளார். வீரழகு வேறு ஒரு நபரை திருமணம் செய்து கொண்ட புகைப்படத்துடன், என்னை இனிமேல் தேடி வர வேண்டாம், நான் இரண்டாவது திருமணம் செய்து கொண்டேன் என அவரது மனைவி கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து மனைவியை மீட்டுத்தரும்படி ஆனந்த் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து வீரழகு இருக்கும் இடம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

வீட்டுக்குள் தொங்கிய நிலையில் கிடந்த சடலம்..! திருட சென்ற வீட்டில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்..!

Sat Aug 27 , 2022
தேன்கனிக்கோட்டையில் நள்ளிரவில் திருட சென்ற வீட்டில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை எம்ஜிஆர் தெருவில் நள்ளிரவு நேரத்தில் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல் அங்குள்ள பல்வேறு வீடுகளின் கதவுகளை பூட்டி விட்டு திருட முயன்றுள்ளது. அப்போது, அந்த கும்பலில் உள்ளவர்கள் அங்குள்ள வீடுகளின் மேல் தாவி குதித்து ஓடியுள்ளனர். இதில், அப்பகுதியை சேர்ந்த மாது என்பவரது ஆஸ்பெட்டாஸ் சீட் வீட்டின் […]
வீட்டுக்குள் தொங்கிய நிலையில் கிடந்த சடலம்..! திருட சென்ற வீட்டில் இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்..!

You May Like