ஒடிசா மாநிலத்தின் நபரங்பூர் மாவட்டத்தில் தன்னுடைய அண்டை வீட்டில் வசித்து வந்தது தன்னுடைய கர்ப்பிணி மைத்துனி ஒருவரை ஒரு ஆண் பால்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. இதனை அந்த ஆணின் மனைவி தன்னுடைய கைபேசியில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வைரல் ஆக்கியதாக சொல்லப்படுகிறது. தம்பதியினர் பாதிக்கப்பட்ட பெண்ணை பயமுறுத்தி உள்ளூர் கோவிலுக்கு அழைத்துச் சென்றதாக சொல்லப்படுகின்றது.
அங்கே நடைபெற்ற சம்பவத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சபதம் செய்ததாகவும் சொல்லப்படுகின்றது. ஆனாலும் அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து, குற்றவாளி மற்றும் அவருடைய மனைவி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, ஒடிசா மாநிலம் கதிகுடா பகுதியில் இருக்கின்ற ஜகநாத்ப்பூர் கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் தன்னுடைய உறவினரான பத்மா ருஞ்சிகரிடம் மருத்துவ மையத்தில் வழக்கமான பரிசோதனைக்காக சென்று இருக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண்மணி கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக சென்றபோது பத்மாவின் கணவர் லிலியா அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது. கர்ப்பிணி உறவினரை பாலியல் பலாத்காரம் செய்து தன்னுடைய கணவருக்கு உதவி புரிந்தது மட்டுமல்லாமல் அதனை தன்னுடைய கைபேசியில் பதிவு செய்தார் என்று தெரிவித்திருக்கிறார் அந்த கர்ப்பிணி பெண்மணி.
காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் தனிப்பட்ட காரணங்களுக்காக தம்பதியினர் இந்த குற்றத்தை செய்திருப்பதாக சொல்லப்படுகின்றது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து அந்த வீடியோவை இணையத்தில் இருந்து நீக்குமாறு சைபர் செல்லிடம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.