கர்நாடக மாநிலம் மண்டியா பகுதியில் வசிப்பவர் மகேஷ் (30) இவருக்கும் ஷில்பா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் இருவீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் நடந்தது. மகேஷ், ஷில்பா இருவரும் கோனேகுண்டே என்ற பகுதியில் வசித்து வந்தனர். இந்நிலையில், ஷில்பா ஆண் நண்பர் ஒருவருடன் கணவருக்கு தெரியாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இந்த விஷயம் கணவர் மகேசுக்கு தெரிந்தவுடன் இதுபற்றி மனைவி ஷில்பாவிடம் கேட்டுள்ளார். ஷில்பாவும் நண்பர் என்று கூறி சமாளித்து இருக்கிறார்.
இது தொடர்பாக கணவன், மனைவி இருவருக்கும் கருத்துவேறுபாடு உண்டானதால் அடிக்கடி சன்டை நடந்து வந்துள்ளது. இந்நிலையில்,ஷில்பா கடந்த இரண்டாம் தேதி கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன் பிறகு வலிப்பு நோயால் மகேஷ் இறந்து விட்டதாக மகேஷின் பெற்றோருக்கு தகவல் அளித்துள்ளார். மேலும், கார் மூலம் மகேஷின் உடலை மண்டியாவுக்கு எடுத்துச் சென்றுள்ளார். மகேஷின் பெற்றோர் வந்து பார்த்த போது மகேஷின் கழுத்து பகுதியில் காயங்கள் இருந்ததை பார்த்து சந்தேகமடைந்த அவர்கள் மண்டியா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், மகேஷின் உடல் கூறு ஆய்வு அறிக்கையில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் காவல்துறையினர் ஷில்பாவிடம் தீவிர விசாரணை செய்தனர். அப்போது, திருமணத்திற்கு முன்பே ஒருவரை காதலித்ததாகவும், அவரை திருமணம் செய்துகொள்ள பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல் மகேஷை திருமணம் செய்து வைத்து விட்டனர். எனவை அவருடன் வாழ விரும்பாததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ததாக ஷில்பா ஒப்புக்கொண்டார். வாக்குமூலத்தின் அடிபடையில் ஷில்பாவை கைது செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த காதலனையும் கைது செய்தனர்.