ஈரோடு மாவட்டம் கோபி அருகே நம்பியூர் கோசனம்பகுதியைச் சேர்ந்த 23 வயது இளம்பெண் ஒருவர் தன்னுடைய தாயுடன் வசித்து வந்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், அவர் திடீரென்று காணாமல் போய்விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பல்வேறு பகுதிகளில் தேடிப் பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினர். இந்த புகாரை அடிப்படையாக வைத்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
காவல்துறையினரின் தேர்தல் வேட்டையும், விசாரணையும் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க காணாமல் போன இளம் பெண் திடீரென வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர் அப்போது அந்த பெண் பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்து இருக்கிறார்கள். இது தொடர்பாக காவல்துறையிடம் அந்த பெண் தெரிவித்ததாவது,
அந்த இளம் பெண் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அதே பகுதியைச் சேர்ந்த டிராவல்ஸ் உரிமையாளரான மணிகண்டன் என்பவரை காதலித்து வந்ததாக கூறியிருக்கிறார் அந்த இளம் பெண்.
அவர்கள் காதலித்து வந்த போது ஆசை வார்த்தை கூறி மணிகண்டன் பலமுறை அந்த இளம் பெண் உடன் உல்லாசமாக இருந்ததுடன் அதனை அவருக்கு தெரியாமல் வீடியோவாக பதிவு செய்து இருக்கிறார். இதற்கு நடுவே சில காரணங்களுக்காக திடீரென்று அந்தப் பெண் மணிகண்டன் உடனான காதலை தூண்டித்து விட்டார்.
ஆகவே அந்த இளம் பெண்ணின் தாயார் அந்த பெண்ணுக்கு திருமணம் செய்வதற்கு ஏற்பாடுகளை செய்கிறார் என்பதை அறிந்து கொண்ட மணிகண்டன் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோவை காட்டி மிரட்டி வந்திருக்கிறார் அந்த இளம் பெண்ணை. ஆனால் அந்த இளம் பெண் எவ்வளவு கெஞ்சியும் விடாமல் கடைசியாக தன்னுடன் உல்லாசமாக இருந்து விட்டால் வீடியோ மற்றும் புகைப்படத்தை அழித்து விடுவதாக தெரிவித்து இருக்கிறார் மணிகண்டன். அந்த பெண்ணும் வேறு வழியில்லாமல் சம்மதம் தெரிவித்திருக்கிறார். ஆகவே வடநாடு பகுதிக்கு அந்த இளம் பெண்ணை மணிகண்டன் அழைத்துச் சென்று 2 நாட்கள் உல்லாசமாக இருந்திருக்கிறார்.
அதன் பிறகு உல்லாசமாக இருந்த வீடியோவை அழித்துவிடுமாறு அந்த இளம் பெண் மணிகண்டனிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அதனை அழிக்க மறுத்த மணிகண்டன், திருமணம் நடந்தாலும் கூட தான் கூப்பிடும் போதெல்லாம் வந்து உல்லாசமாக இருக்க வேண்டும். யாரிடமாவது தெரிவித்தால் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி விட்டு மறுபடியும் நம்பியூர் பகுதிக்கு அந்த இளம் பெண்ணை அழைத்து வந்து விட்டிருக்கிறார்.
இந்த விவரம் அனைத்தும் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையின் மூலமாக தெரியவந்தது. ஆகவே மணிகண்டனை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.