சென்னை சூளைமேடு நெடுஞ்சாலை நெல்சன் மாணிக்கம் ரோடு சந்திப்பில் உதவி ஆய்வாளர் லோகிதக்கன், காவலர் வெள்ளைதுரை உள்ளிட்டோர் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அப்போது அந்த வழியாக வந்த இரண்டு வாலிபர்களை வழிமறித்து அவர்கள் வந்த இரு சக்கர வாகனத்தை காவல்துறையினர் பரிசோதித்தனர். அப்போது அவர்கள் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அதோடு அவர்களிடம் வாகனத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினர் கேட்டிருக்கின்றனர். ஆனால் அந்த இரு சக்கர வாகனம் தன்னுடைய உறவினருடையது என்று அந்த இருவரும் கூறியுள்ளனர்.
அப்போது ஆவணம் வீட்டில் இருப்பதாக தெரிவித்து கைபேசியில் தொடர்பு கொண்டு ஒருவரிடம் காவல்துறையினர் தங்களை பிடித்து விட்டதாகவும் உடனே சம்பவ இடத்திற்கு வருமாறும் தெரிவித்துள்ளார். ஆகவே அந்த சம்பவ இடத்திற்கு விரைந்த ஒரு பெண் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல்துறையை சார்ந்தவர்களிடம் அந்த இருவரையும் விட்டு விடுங்கள் என்று கூறியிருக்கிறார் அதோட காவல்துறையினர் அனைவருமே ஃபிராடு தான் என ஆபாசமான வார்த்தைகளால் தீட்டி இருக்கிறார்.
அந்தப் பெண் திட்டியதை காவலர் வெள்ளைத்துரை வீடியோவாக பதிவு செய்தார். இதனால் ஆத்திரம் கொண்ட அந்த பெண் நாற்காலியின் மீது இருந்த காவலரின் தொப்பியை தூக்கி வீசி உள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.
ஆகவே காவலர் வெள்ளைத்துரை வழங்கிய புகாரின் அடிப்படையில், அக்ஷயா என்ற அந்த பெண் மற்றும் சத்யராஜ் வினோத் என்ற அந்த 2️ ஆண்கள் என மூவரையும் காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். அக்ஷயா காவல்துறையினரிடம் தகராறு ஈடுபட்ட வீடியோ மற்றும் அவர் ஆபாச வார்த்தைகளால் திட்டிய வீடியோ உள்ளிட்டவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றனர்.