கர்நாடக மாநில சட்டசபை பொதுத் தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அங்கே பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்கி உள்ளது. ஆகவே நேற்று கர்நாடக மாநிலத்திற்கு வருகை புரிந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விஜயபுரா பகுதியில் பேரணி நடத்துவதற்கு திட்டமிட்டு இருந்தார்.
ஆனாலும் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் திடீரென்று அந்த பேரணி ரத்து செய்யப்பட்டது. இதன் பின்னர் கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக கர்நாடக மாநில தற்போதைய முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பா மற்றும் அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
இதற்கு நடுவில் மழை பெய்து கொண்டிருந்தபோது பிரதமரின் உருவப்படம் மீது படிந்திருந்த மழை நீரை தொண்டர் ஒருவர் துடைக்கும் வீடியோவை தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்த அமித்ஷா, பிரதமர் மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கையை வைத்திருக்கிறார்கள் என்று பதிவிட்டிருந்தார்.
மேலும் பிரதமர் மோடி மீது மக்கள் வைத்திருக்கும் தன்னலமற்ற இந்த பாசமே பாஜகவின் பலம் என்றும் அமித்ஷா கூறியிருந்தார்.
The unwavering trust in PM @narendramodi Ji and the selfless affection for him is what the BJP has earned and it is its source of strength.
Have a look at this beautiful video from Devanahalli, Karnataka. https://t.co/1OFAlZ1ibL
— Amit Shah (@AmitShah) April 21, 2023