fbpx

துப்பாக்கி காட்டி மிரட்டி.. ஆடைகளை களைய சொல்லி…பாலியல் வன்கொடுமை… இளைஞர்கள் கைது…!

உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் கோட்வாலி பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் உள்ள 30 வயது ஒருவர் நேற்று மாலை கால்நடைக்கு புல் அறுக்க வயலுக்கு சென்றார். அந்த பெண் தனது ஆண் நண்பரை பார்க்க வயல் பகுதிக்கு சென்றதாகவும் சிலர் கூறுகின்றனர். அப்போது, அந்த பெண்ணின் பின்னால் வந்த அந்த பகுதியை சேர்ந்த 7 பேர் வயலுக்கு செல்லும் வழியில் காட்டுப் பகுதியில் அந்த பெண்ணை வழிமறித்துள்ளனர்.

அதன் பிறகு அவர்கள் வைத்திருந்த கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டி அப்பெண்ணின் ஆடைகளை கலைந்து பாலியல் தொல்லை தந்துள்ளனர் இதைத்தொடர்ந்து. அந்த சம்பவத்தை வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து, அந்த கும்பலிடமிருந்து தப்பித்து வந்த அந்த பெண் தனது வீட்டில் இருப்பவர்களிடம் நடந்த சம்பவம் பற்றி கூறியுள்ளார்.

இதைக்கேட்டுஅதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த அனுஜ், குல்தீப், அங்கித், ரவி, ரிஸ்வான், சோட்டா, அப்துல் ஆகிய ஏழு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Rupa

Next Post

மனைவியின் நடத்தையில் சந்தேகம்; கொன்று குளத்தில் வீசிய கொடூர கணவர்..!

Mon Aug 1 , 2022
நவிமும்பை அருகே உரண் பகுதியில் வசித்து வருபவர் சமாதான் (35). இவரது மனைவி விஜயா (34). விஜயாவுக்கு ஏற்கனவே திருமணமாகி கணவர் இறந்ததால், இரண்டாவதாக சமாதானை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் விஜயாவின் நடத்தையில் சமாதானுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே சமாதான் அவரது மனைவியை கொலை செய்ய திட்டம் போட்டார். அவர் போட்ட திட்டத்தின்படி சம்பவத்தன்று சமாதான் அவரது மனைவி விஜயாவை அளவுக்கதிகமாக, மது […]

You May Like