வருடத்திற்கு ஒருமுறை சந்திர கிரகணம் மற்றும் சூரிய கிரகணம் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பது தான் சந்திர கிரகணம் என்ற நிகழ்வாகும். அதேபோல சூரியனுக்கும், பூமிக்கும் இடையில் ஒரே நேர்கோட்டில் சந்திரன் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும் போது இது நிகழ்கிறது. பூமியின் நிழல் சந்திரன் மேற்பரப்பில் விழும்போது பெனும்பிரல் என்ற சந்திர கிரகணம் உண்டாகிறது.
இத்தகைய நிலையில், இந்த வருடத்தின் முதல் சந்திர கிரகணம் மே ஐந்தாம் தேதியான இன்றைய தினம் நடைபெற உள்ளது. முதல் சூரிய கிரகணம் மே மாதம் 20ம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, சந்திர கிரகணம் மே மாதம் 5ம் தேதி அதாவது இன்று இரவு 8.45 மணி முதல் மறுநாள் காலை 1 மணி வரையில் நிகழ உள்ளது இந்த சந்திர கிரகணமானது ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே தெரியும். இந்தியாவில் இதை பார்க்க முடியாது என்று சொல்லப்படுகிறது.