fbpx

வளைகுடா நாடுகளில் கொட்டு தீர்க்கும் கனமழை; நிரம்பி வரும் அணைகள்..!

வளைகுடா நாடுகளில் பலத்த மழை என்பதையெல்லாம் நாம் கேல்வி பட்டிருக்க மாட்டோம். இங்கு பாலைவனங்கள் அதிகமாக இருப்பதால் கடும் வெயில் தான் இருக்கும். கோடை காலங்களில் வெயிலின் அளவு சொல்லமுடியாத அளவு உச்சத்தை எட்டும். அதே சமயம் மழை காலத்தில் லேசான மழை இருக்கும். சில சமயங்களில் நேரங்களில் கனமழை பொழியும்.

ஆனால் தற்போது கடந்த சில வாரங்களாக ஐக்கிய அரபு நாட்டில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த கன மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் கனமழை காலங்களில் மழை நீரை சேமித்து வைக்க ஐக்கிய அரபு நாட்டில் ஆங்காங்கே அணைகள் கட்டப்பட்டு இருக்கின்றன. தற்பொழுது இந்த கன மழை காரணமாக ஐக்கிய அரபு நாட்டில் இருக்கும் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.

இந்நிலையில் வலைகுடா நாடுகளில் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே அணைகளுக்கு மேலும் நீர் வர வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதை தொடர்ந்து ஐக்கிய அரபு நாட்டில் இருக்கும் வுராயா, ஷவ்கா, புராக், சிப்னி, அல்அஜிலி, அஸ்வானி, மம்தூஹ் ஆகிய ஏழு அணைகள் திறக்கப்பட்டுள்ளன

Baskar

Next Post

2023 முதல் ஜான்சன் & ஜான்சன் பேபி பவுடர் கிடைக்காது.. இதுதான் காரணம்..

Fri Aug 12 , 2022
பேபி பவுடர் உற்பத்தியை நிறுத்துவதாக ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிவித்துள்ளது. பிரபல வர்த்தக நிறுவனவமான ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தயாரிப்புகள் குறித்து அவ்வப்போது பல குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன.. குறிப்பாக ஜான்சன் & ஜான்சன் பவுடரை பயன்படுத்திவதால் புற்றுநோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது.. இதுதொடர்பாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.. எனினும் தங்கள் நிறுவனத்தின் பவுடர் பாதுகாப்பானது என்றும் புற்றுநோயை ஏற்படுத்தாது என்று அந்நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது. […]

You May Like