கோவையில் திருமணம் முடிந்த எட்டு மாதத்தில் மனைவிக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்த சேல்ஸ் ஆபிஸர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை சரவணம்பட்டியை சேர்ந்த 25 வயதான சேல்ஸ் ஆபீஸராக வேலை பார்த்து வரும் ஒருவருக்கும், அதே பகுதியை சேர்ந்த 23 வயதான எம்.இ. பட்டதாரி இளம்பெண்ணுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி திருமணம் நடந்தது. அதன் பிறகு இருவரும் தனியாக வசித்து வந்தனர். அப்போது கணவன், தனது மனைவியுடன் விருப்பத்துக்கு மாறாக செக்ஸ் டார்ச்சர் அளித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த இளம்பெண் பலமுறை தனது கணவரிடம் எடுத்து சொல்லியும் அவர் கேட்கவில்லை என்று கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வீட்டுக்கு வரும் அவர் தனது மனைவியிடம் கொடூரமாக செக்ஸ் உறவு வைத்துள்ளார். இதனால் அந்த இளம்பெண் இது குறித்து தனது தாயிடம் சொல்லி அழுதுள்ளார். இருந்தபோதிலும் அவரின் தொல்லை நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே சென்றதால், பொறுமை இழந்த அந்த பெண் கோவை கிழக்கு மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்துள்ளார்.
அதில், தனக்கு திருமணம் முடிந்து எட்டு மாதம் ஆகிறது. அவரது கணவர் அவரிடம் விருப்பத்துக்கு மாறாக செக்ஸ் தொல்லை கொடுப்பதாகவும், மேலும் அவரது மாமனார், மாமியார், மற்றும் கணவரின் அண்ணன், அண்ணி ஆகியோர் நான்கு லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்து வருகிறார்கள், எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதன்பேரில் காவல்துறையினர், அந்த நபர் மீது மனைவிக்கு செக்ஸ் தொந்தரவு கொடுத்ததாகவும், மாமனார், மாமியார் உள்பட 4 பேர் மீது வரதட்சணை கேட்டு தொந்தரவு செய்ததாகவும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.